பக்கம்:ஆடும் தீபம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

137


படுத்திருந்த கட்டிலுக்கு அருகாமையில் கிடந்த ஒரு முக்காலியின் மீது ஒரு தட்டில் கனிகளும், ஒரு கண்ணாடிக் கோப்பையில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தன.இருந்தாற்போலிருந்து இலேசாக அசைந்து கொடுத் தாள். மூச்சு இலேசாக இழையிட்டது. வலதுகை வலுவிழந்ததைப்போல கட்டிலிலிருந்து இடம்பெயர்ந்து கீழே தொங்கிய வேகத்தில், முக்காலியில் பட்டுவிட்டது. கண்ணாடிக்கோப்பையும் பழத்தட்டும் கீழே விழுந்து அமைதியைக் கலைத்துக்கொண்டு ஓசை எழுப்பின. திடுக்கிட்டுப் போய் வெடுக்கென விழுந்தாள் அல்லி. படுத்திருந்த படியே சுற்றிலும் விழிகளை உருட்டி நோக்கினாள் இடம் புதிதாயிருக்கவே சட்டென்று எழுந்து அமர்ந்தாள். கவிழ்ந்து கிடந்த பழத்தட்டையும் கோப்பையையும் ஒரு முறை பார்த்துவிட்டு எழுந்து நின்றாள். சிலமணி நேரங்களுக்குமுன் நடந்த சம்பவங்கள் அவளுடைய நினைவில் பளிச்சிட்டன. சினிமாக் கம்பெனிக்கார் வந்ததும், தான் அதில் ஏறிச்சென்றதும், பாதி வழியில் சிறிய தெரு ஒன்றுக்குள் திரும்பி ஓர் இடத்தில் போய் நின்றதும், அப்போது காருக்குள் ஏறி அமர்ந்தவனைக்கண்டு அவள் கூச்சலிட்டுக் கொண்டு மயங்கி விழுந்ததும் நன்றாக நினைவுக்கு வந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் அவளுக்குத் தெரியாது. பாரதி கற்பனை செய்தபுதுமைப் பெண்ணைப் பற்றி அடிக்கடி ராஜநாயகம் சொல்லியிருக்கிறார் முறங்கொண்டு புலியைத் துரத்தியடித்த வீரத்தமிழ்ப் பெண்மணி யொருத்தியின் கதையைக் கூறி அவளாகத்தான் இருக்கும் பாரதியின் கற்பனைப் பெண்ணும் என்று சொல்வார். பாரதியின் புதுமைப்பெண் பாட்டுக்கு அல்லிக்கு அபிநயமே கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த இக்கட்டான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/138&oldid=1333008" இலிருந்து மீள்விக்கப்பட்டது