150
ஆடும்
கேட்ட போதும், சினிமாக் கொட்டகையில் எதிர்பாராத விதமாக, சாத்தையனைக் கண்டது மட்டுமன்றி, அவன் அருணாசலத்துக்கு சினேகிதன் என்று தெரிய வந்த போதும், அருணாசலம் சந்தேகப்பட்டு, அவளைக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்ட போதும், சுகுணா என்று கையெழுத்திட்டிருந்த கடிதத்தைப் படித்த போதும், சூதாக காரில் அழைத்துச் செல்லப்பட்ட போதும், சாத்தையன் காரில் ஏறிய போதும், அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளெல்லாம் சாதாரணமானவை என்று கருதும்படி செய்து விட்டது இன்னாசியின் வார்த்தைகளைக் கேட்ட போது, ஏற்பட்ட அதிர்ச்சி. அவன் பேசியதை, அவள் காதுகள் கேட்டன. ஆனால், நம்ப மறுத்தன. அவள் முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லாமலே, “மேற்கொண்டு எந்தச் சூழ்ச்சிக்கு, இப்படிப் பேசுகிறாய்?” என்று அவள் வாய் வெடித்துக் கேட்டது.
இன்னாசி, அதைப் பொருட்படுத்தவே இல்லை. “நான் நிற்கிற இடத்திலிருந்து, ஒரு எட்டுக் கூட அசையாமல் நிற்கிறேன். நீ போகும் போது, வெளிக் கதவைத் தாளிட்டுக் கொண்டு, வேண்டுமானால் போய் விடு.” அவன் குரலில் இருந்த அழுத்தம், உறுதி, அந்தரங்கம் அல்லியை அயர்த்தி விட்டன. இப்போது நம்புவதா, மறுப்பதா என்று இரண்டுங் கெட்ட நிலையில் அவதிப்பட்டாள். பட்டாமணியம் பாளையப்பத் தேவர் மகன் இன்னாசி, தூரத்திலிருந்து சீட்டியடித்து, பிறகு ஊரில் தன்னைப் பற்றி வதந்தியைக் கிளப்பிய இன்னாசி—சாத்தையனுடன், தனக்காக கொலைக்கும் தயாரான இன்னாசியா, இப்படிப் பேசுகிறான்! இது நம்ப வேண்டிய, எடுத்துக் கொள்ள வேண்டிய வார்த்தைதானா?
ஒரு கணம் தயங்கினாள். பிறகு, ‘அதனால் என்ன, சோதித்துத்தான் பார்ப்போமே’ என்று கம்பியை அவனுக்கு