பக்கம்:ஆடும் தீபம்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

161


 அருணாசலம் திறந்த கதவுகளை ஓரக்கண்ணால் பார்த்தவாறு இருந்தான்.

“ என்ன அருணாசலம், ஓடப் பார்க்கிறாயா? காரியம் மிஞ்சிவிட்டது!’’

  • நீ என்ன சொல்கிறாய், இன்னாசி”

அல்லி பதை பதைத்தாள்.

அருணாசலம் இவர்களுடைய நண்பன் என்று தெரியும், ஆனால் பழங்கணக்கு ஒன்றை இன்னாசி வீசுகிறானே? இல்லை, அதுவும் “சுகுணா போன்ற கதைதானா? அப்படியானால் அருணாசலம் ஏன் இப்படி வாயடைத்து ஓடத் தயாராக இருக்கிறவனைப் போல நிற்க வேண்டும்?

அவளுடைய எண்ணச் சங்கிலி திடீரென அறுந்தது.

அவள் கண் முன் நின்ற அருணாசலம் மின்னலாகப் பாய்ந்து வெளியே ஓட, பின்னால் இன்னாசி விரைந்து தொடர்ந்தான்.

ராஜநாயகமும் ஓடினார்...!

அவர்கள் எந்த டாக்ஸி'யில் வந்து இறங்கினார்களோ, அதில் அருணாசலமும் ஏறியது அவர் கண்ணுக்குத் தெரிந்தது.காரியம் எல்லோர் கையையும் விட்டு அகன்ற தாகவே எண்ணினர்.

அவர் மீண்டும் அறைக்குள் நுழைந்தபோது, அல்லி அழுதுகொண்டிருந்தாள். உண்மை புரிந்த போது உணர்ச்சிக்கட்டு தானே அவிழ்ந்து கொண்டது. மனக்கோயிலில் அவளே ஆவாகனம் பண்ணிவைத்த உருவம் கண்முன் இப்படியா சரிய வேண்டும்: