பக்கம்:ஆடும் தீபம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

163


 “மொந்தைக்கள் அழகு விதியின் இரும்புக் கம்பியாக நீண்டது. அவள் சமயத்தில் ரெயிலில் செய்த உபகாரம் அவளுடைய காதல் பிரமையை எழுப்பிய உருவத்தைக் கடைசியாக ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. இவர்களுடைய முடிவுகளுக்கெல்லாம்தான்.அவள் பிறந்தாளா? வளர்ந்தாளா? அவளுடைய அழகுக் காரணம் அரக்கள்களுடைய அழிவுக்குத் தானா?

இப்படியே அவள் இன்னும் எத்தனை பேரை அழிக்க வேண்டும்? விதி எப்படியெல்லாம் இரும்புக் கம்பியை நீட்டியும் வளைத்தும் தீட்டியும் வைத்திருக்கிறதோ?

ஒருவேளை அவள் கிராமத்தைவிட்டு ஓடிவந்ததேபிசகோ? பிறந்த மண்ணை உதறினால் இத்தகைய சாபக்கேடுகள் வருமோ? மாங்குடியின் கட்டுக் கோப்பான வாழ்க்கையையும், மரகதக் கம்பளமாக விரிந்திருக்கும் நெல் வயல்களையும் விட்டு எப்படி அன்று ஓடிவந்தாள்? உண்மையில் அன்றுபயந்தாளா? அல்லது, பயம் எனும்மாயை சூழ்ந்து கொண்டதா? சமூகத்தின் நயவஞ்சகர்களைக் கண்டு அஞ்சாத அவள் சமூகத்தின் பார்க்காத நாக்குகளிலிருந்து ஒலிக்கும் கேட்காத ஒலிச்சிதர்களைக் கேட்டு ஏன் அப்படி அஞ்சினாள்? பெண்மையோடு பிறந்த மானம்தானே அதற்குக்காரணம்? அந்த மானத்தைக் காத்துக்கொள்ள, ஓடிச்செல்லுவது தானா காரணம்?

தகப்பன் வைத்து விட்டுப்போன இரண்டு ஏக்கராநிலமும் வீடும் கண்முன் நின்றன. அவள் உழைத்துப் பிழைக்கம் பிறந்த மண்ணில் வழி இருக்கையில் மழைக்கும் வெய்யிலுக்கும் மானத்துக்கும் ஒதுங்கிவாழ வீடு இருக்கையில், ஊரார் பேச்சுக்குத் தன் காதைச் செவிடாக்கிக் கொண்டு வாழமாட்டாமல், அவள் இருந்தால் அவள் எதனோடு சேர்த்தி? காலம் என்னும் குப்பைகொட்டக் கொட்ட,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/164&oldid=1389276" இலிருந்து மீள்விக்கப்பட்டது