உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ஆடும்


“கொலைகாரி! உன்னைச் சாகடிச்சிடுவேன்!” விர்ரென்று எழுந்து வெளியே ஓடினாள். செந்தாமரையின் கழுத்தை நோக்கி இரு கரங்கள் நீண்டன.

“கொன்னுடு. ஏன் தயங்கிறே?”

அல்லியின் கைகள் துவண்டு கீழே விழுந்தன. “நீ பெண்… ”

“நீயும் பெண்தானே?”

“யார் நினைக்கிறாங்க? முதல்லே நீ நினைச்சியா? சதா என்னைக் கொன்னுக்கிட்டே இருப்பதிலே, உங்களுக்கு என்ன சுகம்? உங்களுக்கெல்லாம் வேறே வேலை இல்லை? நீ பொம்பளைப் பிள்ளைதானே?— உங்க வீட்டிலே விளக்கேத்தி வைக்கிறதுதானே? அதை விட்டுட்டு, ஏன் என் மனசிலே கொள்ளியை ஏத்தி வைக்கிறே!”

“அப்பாதான் சொல்லிச்சு, அக்கா!…”

“அந்த ஓடுகாலிக் கழுதையோடே உனக்கென்ன பேச்சு, செந்தாமரை? குதிகாலைப் பெயக்க வேணுமா?” என்ற இடிகுரல் கேட்டு இருவரும் விதிர்விதிர்த்து நின்றனர்.

வெண்டியப்ப அண்ணன் மாட்டுக் கொட்டகையிலிருந்து குதி போட்டுக் கொண்டு ஓடி வந்தார். “சாயந்திரம் என்ன சொன்னே, அல்லி? என் மகளோடே பேசினா, உன் நாக்கை இழுத்துப் பிடிச்சு அறுக்கச் சொன்னாயல்லவா, இப்போ அறுக்கத்தானே வேணும்?”

அல்லி ஒன்றும் கூறவில்லை. தளர்ந்து நடந்து, இருளோடிக் கிடந்த ஆல் வீட்டில் வந்து சாய்ந்தாள்.

இதே ஆல் வீட்டில் இரண்டு சாவுகளைக் கண்டிருக்கிறாள் அவள். முதல் சாவைக் கண்ட போது, அவளுக்கு நான்கு வயது. இறந்து கிடந்தவர் அவள் அப்பா. எல்லோரும் அழுதார்கள். அவள் தாய் மார்பில் அடித்துக் கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/19&oldid=1682488" இலிருந்து மீள்விக்கப்பட்டது