பக்கம்:ஆடும் தீபம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

21)



குது.குடிவெறிகொண்ட காலிப் பயலுங்க ஊரிலே அதிகம்”

குழந்தையைப் போலப் பேசிக் கொண்டிருந்த அல்லி, இந்த இடத்தில்தான் பெரியமனுஷியானாள்; “நீ பெத்த பெண்ணம்மா நான் .ஆயிரம் காலிப் பயல்களுக்கு மத்தியிலே கூட உன் பொண்ணு புடம் போட்ட தங்கமா நின்னு ஜொலிப்பாம்மா!”

தாயைப் பறி கொடுத்த கொஞ்ச நாட்களுக்குள்ளேயே அவள் அம்மாவின் பெண்ணாக நடந்து காட்ட வேண்டிய நெருக்கடி வந்து தொலைத்தது. அம்மா இறந்த வீட்டில், யாரோ பொல்லாத பருவத்தை வைத்துக்கொண்டு எப்படித் தனியாக வாழ்ந்து குப்பை கொட்டப்போகிறாய்?’ என்றார்களே, அது எவ்வளவு உண்மையாகிவிட்டது?

சாயங்காலம் வரை தூங்கி விழுந்துவிட்டு, பொழுது சாய்ந்ததும் அவசரஅவசரமாக நீலச்சவுக்காரம் போட்டு வேட்டியைத் துவைத்து உலர்த்திக்கொண்டே ஆயிங்குடி டேராச் சினிமாவுக்குப் போகும் பெரிய மனிதர்கள் வீட்டு இளவெட்டுகள் மாங்குடியில் அதிகம். டேராவுக்கு லைசென்ஸ்’ கிடைக்காமல் ஆயிங்குடியில் சினிமா நின்று விட்டால், இளவெட்டுகளின் இரவு நடமாட்டம் கன்னியர்கள் வாழும் வீடுகளைச் சுற்றி அலையும். ஒரு தலைப் பண்பு’ என்ற நொண்டிக்குதிரையில் சவாரி செய்யும் ! ஜாக்கி'கள் இந்த வரிகளைப் படித்து முகத்தைச் சுளித்தால், இவர்கள் ஏறி அமர்ந்த நொண்டிக்குதிரை இன்றையக் கிராமாந்திரங்களில் நடமாடவில்லை என்று தான் அனுதாபப்பட வேண்டும்! அல்லி தாயைப் பறிகொடுத்த ஆறாவது மாதத்தில் ஆயிங்குடி சினிமா நடக்கவில்லை. வாலிபர்களின் நடமாட்டம் அவள் வீட்டைச் சுற்றி அதிகமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/22&oldid=1390032" இலிருந்து மீள்விக்கப்பட்டது