பக்கம்:ஆடும் தீபம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

45


எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் என்னிடம் பணமும் இல்லை. ஆகவே டிக்கட் எடுக்கவில்லை. தனது செயலுக்கு விளக்கம் கொடுப்பவன் போலவும், தன்னை அறிமுகம் செய்து கொள்வது போலவும் பேசினான் அவன்.

  • நீ எங்கே போகிறாய்... ...?”


பட்டணத்துக்குத்தான் ‘அங்கே உனக்கு யார் இருக்கிறார்கள்?’’ “எங்குமே யாருமில்லை!” என்றாள் அல்லி.

பின்னே அங்கு ஏன் போகிறாய்!” ‘பிழைப்புத் தேடித்தான்... ...’ “ உனக்குப் பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா?’’

அருணாசலம் இப்படிக் கேட்டதும் அல்லிக்குச் சிறு கோபம் வந்தது. ‘ஒரு பெண்ணுக்குத் தெரிய வேண்டிய வீட்டு வேலைகள் எல்லாம் எனக்குத் தெரியும்’ என்று வெடுக்கெனச் சொன்னாள் அவள்.

அவன் உதடுகளைச் சுளித்தான். பிரயோசனமில்லை!” என்பது போல் தலையை ஆட்டினான். ‘பட்டணத்திலே சுகமான பிழைப்பு கிடைப்பதற்கு ஆட்டமும் பாட்டும் தான் உதவி புரியும். வாயடியும் கையடியும் ஆணுக்குத் துணை நிற்கும்!’ என்று அவன் சொன்னான்.

இதற்குள், அல்லிக்கு எதிர்ப்பெஞ்சில் அவன் இடம் பிடித்து உட்கார்ந்துவிட்டான். அவளுக்கு அவனைப் பிடித்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனால் அவன் மீது அவளுக்கு வெறுப்பு ஏற்படவில்லை. அவளுடைய விருப்பு வெறுப்புகளை-பொதுவாக எவருடைய விருப்பு வெறுப்புகளையும்-பற்றி அக்கறை கொள்ளாது ரயில் வண்டி ஓடிக்கொண்டேயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/46&oldid=1244308" இலிருந்து மீள்விக்கப்பட்டது