பக்கம்:ஆடும் தீபம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

ஆடும்



கடைக் குழியில் தலை குப்புற விழ தம்மையே ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தார்.

“ஐயோ பாவம்’ என்று அல்லி அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தபோது, அவர் பேச்சுக்கள் அவளைச் சிலிர்த்தெழச் செய்தன. கண்கள் ஜிவு ஜிவு என்று சிவக்க அவள் அவரை ஏறிட்டுப் பார்த்தவாறு அன்று ரெயிலடியில் என்னுடன் அருணாசலம் மட்டும் இராமல் இருந்தால், என்னை நீங்கள் என்ன செய்து விடுவீர்களாம்? வளர்த்த மகளுக்குத் திருமணத்தைச் செய்து கண்குளிரப் பார்க்கவேண்டிய தாங்கள், இந்த வயதில் திருமணத்திற்கு ஆசைப்படுகிறீர்களே? ஒரு பெண்ணைத் தன் சகோதரியாகவோ, மகளாகவோ பார்க்கவே உங்களில் அநேகருக்குத் தெரியாதோ? வாத்தியார் ஐயா ! இறந்துபோன என் தந்தையெனவே உங்களை நம்பி நான் இந்த வீட்டுக்கு வந்தேன். மானமாக வாழ எனக்கு எத்துணையோ வழிகள் உண்டு. உலகம் பரந்து கிடந்த போதிலும், மனித இதயம் சூம்பிப்போய் இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்? ஐயா! என்னை உங்கள் மகளாகவே நினைத்துக் கொள்ளுங்கள்... ...!” என்று தேம்பினாள்.

அல்லியின் கண்ணாடிக் கன்னங்களில் கண்ணீர்த் திவலைகள் தாரை தாரையாக இறங்கி வந்தன.

ராஜநாயகம் பால்யந்தொட்டுப் பயின்று வளர்த்து வந்த பரதக்கலை தெய்வீகமானது. கடவுளுடைய அருளோடு கூடியது. படிப்பால் உயர்ந்த அக்கலைஞனின் இதயத்தில் முடியிருந்த இருள் விலகிற்று.

அல்லி, நீ என் மகள்தான் அம்மா. என்னவோ என் மனம் சரியாக இல்லை. ஏதேதோ பேசிவிட்டேன்.கீழே முகம் கழுவி, தலை வாரிக்கொண்டு வர இன்றே

ஆரம்பிக்கலாம்’ என்று கூறியவாறு ராஜ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/59&oldid=1298481" இலிருந்து மீள்விக்கப்பட்டது