பக்கம்:ஆடும் தீபம்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

ஆடும்


எழுந்தாள் அல்லி. பிறகு வாத்தியாரையும் வணங்கினாள்.

‘தக...தைய்ய... தீம்...தக ... தாம்...தைய்ய ...தீம்!'” என்று தாளமும், இசையும் ஒலிக்க அல்லி நாட்டியம் பயில ஆரம்பித்தாள். . வாயிற் கதவைத்திறந்து கொண்டு நேற்று வந்த அலங்கார வல்லிகள் நால்வர் உள்ளே வந்தனர். உதட்டுச் சாயமும் குதிரை வால் கொண்டையுமாக அவர்கள் வந்து அங்கே நின்றபோது, கோயில் சிற்பத்தின் அரு கில் தற்கால நவராத்திரி நடனப் பொம்மைகளைக் கொண்டு வந்து வைத்தாற் போல் இருந்தது.

என்னங்க வாத்தியார் ஐயா! நீங்க இன்னிக்கு அல்லிக்குப் பாடம் ஆரம்பிக்கப் போறேன்னு எங்களிடம் ஒன்றுமே சொல்ல வில்லையே?’ என்று கேட்டவாறு அல்லியின் மீது தங்கள் பார்வைகளைப் பதித்தனர். அல்லி பழைய நாட்டுப்புற அல்லி அல்ல. மாங்குடியிலிருந்து வெள்ளை மனத்துடன் வெளியேறிய அவள் இப் பொழுது நாலும் தெரிந்தவள் ஆகிவிட்டாள். ஒடும் ரெயிலில் அருணாசலத்தின் மீது அவளுக்கு ஏற்பட்ட அனுதாபம் நிலைத்து நின்று விட்டது. அத்துடன் மட்டும் இல்லாமல், அருணாசலத்தின் வாசாலகப் பேச்சிலும், கம்பீரச் சிரிப்பிலும், குளிர்ந்த பார்வையிலும் தன் மனத்தைப் பறிகொடுத்து விட்டாள் அவள். அவன் யாராயிருந்தால் என்ன? எங்கே பிறந்திருந்தால் என்ன? அவனுக்கும் அவளுக்கும் நெடுநாளாகப் பிணைப்பு ஏற்பட்டது போன்ற பிரமையை அவள் இதயம் உணர்த்திக் கொண்டேயிருந்தது

நடனக் கலையை அவள் ஆவலுடன் பயின்று வந்தாள். இன்னாசியும் சிங்கப்பூரானும் ஒரு விதத்தில் அவளுக்கு