பக்கம்:ஆடும் தீபம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

77


ரத்தம் வேகவிசையில் முகத்தில் ஏறஉதடுகள் துடித்தன; “எதற்குப் போவார்கள்? கலையைக் கையில்வைத்துக் கொண்டு, பின் இரும்புக் கடைக்கா போவார்கள்?’’

ராஜநாயகம் வாய்விட்டுச் சிரித்தார். “இரும்பு கரும்பொன். பொன்னைவிடச் சிறந்தது தம்பி! கலை என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு? பொன்னின் பகட்டு இருந்தாலும் இரும்பைவிட உறுதியானதாக அது இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதில் தெய்வீகம் இருக்கும். கடை தேடிப் போய் விலை கூறும் சரக்கல்ல கலை. அது ஈசுவர உபாசனைக்குரியது; மலரின் மென்மையும் அதற்கு உண்டு!... ... # 3

‘மண்ணாங்கட்டி!’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் அருணாசலம்.

ராஜநாயகம் அதைப் பொருட்படுத்தாமல் மேலும் தொடர்ந்தார்: “நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். அல்லி என் மகள்! அனுபவமில்லாத அவள் எளிதில் உன்னிடத்தில் மயங்கியது பெரிதல்ல; அவளைத் திருத்த எனக்கு வழி தெரியும்.நான் உனக்குச் சொல்லப் போவது என்னவென்றால்-சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன்-அல்லியின் வழிக்கு இனி நீ வரக்கூடாது. இன்று போகட்டும், இனி இதுமாதிரி என் உத்தரவன்னியில் அவளைக்கூட்டிக்கொண்டு போனால் அப்புறம் நான் ரொம்பவும் பொல்லாதவனாக இருப்பேன். ஆமாம்’! சற்றுக் கோபமாகவே பேசினார் ராஜநாயகம். சத்தம் போட்டுப் பேசினால் தம் உணர்ச்சியை அருணாசலம் எளிதில் புரிந்து கொள்வான் என்று நினைத்தாரோ என்னமோ?-குரல் ஓங்கிப் பேசினார். அருணாசலம் இதைக் கேட்டதும் பயம் நிரம்பிய சிரிப்புச் சிரித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/78&oldid=1302129" இலிருந்து மீள்விக்கப்பட்டது