பக்கம்:ஆடும் தீபம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

ஆடும்


“அண்ணாச்சி, ஊரிலே எல்லோரும் பேசிக்கினாங்க;அந்த பாயாஸ்கோப்பிலே நம்ம அல்லி ஆடுதாம்!’ செந்தாமரை வருத்தத்துடன் கூறினாள்.

‘ஆடிட்டுப் போகட்டுமே? அது ஆடப்பொறந்தது. அடங்கிக்கெடக்கப்பொறக்கல்லே! அதுக்கு நீ ஏன் அழுவுறே?” * நீ இப்படிச் சொல்லாதே அண்ணாசசி! என்னோடு உசிருக்கு உசிராகப் பழகிய சிநேகிதி அவ எனக்கு அவளைப் பத்தின பேச்சு நாலுபேர் வாயிலே புரளறப்போ எப்படியிருக்கு, தெரியுமா?’’ “என்னை என்ன செய்யச்சொல்றே இப்போ?’’

அண்ணாசசி, எனக்கு அல்லியை இப்பவே பார்க்கணும். பார்த்து, ‘பாவி, நம்ம பழக்க வழக்கத்தையெல்லாம் மறந்திட்டியா? ஒடினதுதான் ஓடின; இப்படி பகிரங்க மாகவே வெளிப்பட்டுப்பிட்டியே?”...அப்படின்னு கேக்க ணும். அவள் கன்னத்திலே என் கையாலே நாலு அறை வைக்கனும்!”

வெண்டியப்பன் வாய்விட்டுச் சிரித்தான். ‘பைத்தியக்காரி!...அல்லியைப்பத்தி உனக்கு ஏன் கவலை?... பணம் கைக்கு வந்தவுடன் நாமும் பட்டணம் பொறப்படலாம். அந்தப்பீடையை பார்க்கறதுக்கல்ல!... நம்ம அத்தைமகன் கண்ணப்பன் பட்டணத்துலே இருக்கான்லே... அந்தச் செண்பகத்து அத்தை வீட்டுக்குப் போகப்போறேன். உன்னையும் கூட்டிக்கிட்டுவரச்சொல்லி அத்தை எழுதியிருக்குதே! அவளது நினைவுப்பந்தலில் இளமை நினைவுகள் படர்ந்தன. வெள்ளைச் சட்டையும் கிராப்புத் தலையுமாக விளங்கும் பட்டணத்து அத்தான் கண்ணப்பனின் உருவம் நிழலாடியது.

மெளபரிஸ் சாலையின் தருக்கள் கவிழ்ந்த நிழலின் கீழ், கப்பல் போன்ற நிறமுள்ள கார் வழுக்கிக்கொண்டு ஓடியது ஆழ்வார்ப்பேட்டைத் திருப்பத்தைக் கடந்து லஸ் மாதாகோயில் சாலையினூடே விரைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/85&oldid=1303704" இலிருந்து மீள்விக்கப்பட்டது