பக்கம்:ஆடும் தீபம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

93


ஊன்றி விட்டது. அது முளையிலேயே கருகி விடுமா? அதைக் கருக்கும் சக்தி யாருக்கு உண்டு? இல்லை, வளர்ந்து கிளைத்தெழுமா? அப்படியானால் அல்லியின் கதி என்னவாகும்? சிறு காற்று தன்னுடைய இன்ப மனவிளக்கை அணைத்து விடாமல் இருக்கவேண்டுமே என்று எண்ணி அருணாசலம் என்கின்ற ஆதரவைத் தேடி வந்தாள் அல்லி. அங்கே அதை அணைக்க ஒரு சுறாவளியே தயாராகும் என்பதை அந்த அறியாப் பெண் உணர வில்லையே?

சாத்தையா சொல்வது ஏன் உண்மையாக இருக்கக் கூடாது? என்னைப்பற்றி அவள் எல்லாம் கேட்டறிந்து கொண்டாள்; ஆனால் அவளைப்பற்றி ஏதாவது கூறினாளா? நான் தூண்டித் துளைத்துக் கேட்கவில்லைதான்: இல்லாது போனாலும், அவள் மாசற்றவளானால் தானாகவே சொல்லியிருக்கலாமே? பழங்கதையைக் கிளறி தன் அவல வாழ்வை அம்பலப்படுத்த வேண்டாம் என்ற எண்ணமாக இருக்கலாம். மாங்குடியில் வந்து கேள்!’ என்று கூறினானே சாத்தையா? அன்றைக்கு சினிமாத் தியேட்டருக்கு முன்னாள் செந்தாமரையின் அண்ணன் கூறின வார்த்தைகளிலிருந்தே மாங்குடிக்காரர்களின் மனம் புரிகிறதே?...

‘இந்த சாத்தையாவிடம் அல்லிக்கு எவ்வித பயமும் இல்லாது போனால், அவள் அவனைக்கண்டவுடன் ஏன் மயங்கி விழவேண்டும்? சம்பந்தமில்லாமல் ஏன் புலம்ப வேண்டும்? ஆம்; அல்லியின் வாழ்க்கையில் ஏதோ மர்மம் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. அதை அவள் மறைத்து என்னை ஏமாற்றப் பார்க்கிறாள்!’

இந்த எண்ணம் எழுந்தவுடன் வெறி கொண்ட வேங்கையானான் அருணாசலம்.

ராஜநாயகத்தின் அழைப்பின் பேரில் அருணாசலம் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/94&oldid=1311158" இலிருந்து மீள்விக்கப்பட்டது