பக்கம்:ஆடும் தீபம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுதீபம்

97


டையும், தாளத்தையும், பாவத்தையும், முத்திரையையும் ஒருமிக்கக் கவனித்துப் பழக்கப்பட்டவராயிற்றே? சாத்தையாவைக் கண்டவுடன் அவருடைய அனுபவ மனம் எடை போட்டு விட்டது; சாத்தையன் ஓர்அயோக்கியன்! அருணாசலமும், அவனும் கூடிக்கூடிப் பேசியது. அதற்குப்பின் அருணாசலத்திடம் ஏற்பட்ட முகமாறுதல், அவனுடைய போக்கு, எல்லாவற்றையும் ராஜநாயகம் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் அவன் மனத்தை இத்துணை விரைவில் மாற்றும் அத்தனை சக்தி சாத்தையாவுக்கு இருக்கும் என்று.அவர் எண்ணவில்லை.

பூனையின் கண்கள் மூடிவிடலாம்; அதற்காக உலகம் தன் பேரில் இருள் திரையை விரித்துக் கொண்டு விடுமா, என்ன?

இந்தச் சமயத்தில் வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்களைக் கண்டதும் சாத்தையா இடியால் தாக்குண்டவன் போல் நின்றான் ஆம்; அவர்கள் செந்தாமரையும், அவளுடைய ஆசை அத்தானான கண்ணப்பனும்தான்.

கண்ணப்பனுக்கு அல்லியைப் பற்றிச் செந்தாமரை சேதி சொன்னாள் அல்லி திரைப்பட நடிகை என்றவுடனேயே கண்ணப்பனுக்கு அந்த விஷயத்தில்அக்கறை உண்டாகி விட்டது. சினிமா நட்சத்திரங்களின் பாதையில் தலையிடுவது எப்பொழுதுமே அவனுக்கு மிகவும் பிடித்தமான செயல். இந்த விஷயத்தில் தான் பிரவேசிப்பதன் மூலம் தன் காதலி. செந்தாமரையின் பெருமதிப்பைச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதும் அவன் குதூகலத்துக்குக் காரணமாக அமைந்தது. வெண்டியப்பனுக்குத் தெரியாமல் அவர்களிருவரும் புறப்பட்டு வந்தார்கள். அல்லி நாட்டியமாடியிருந்த படக் கம்பெனியில் போய் அவளுடைய விலாசத்தை விசாரித்துக் கொண்டுவந்திருந்தார்