பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

னால் சிரிப்பு வராதா சிநேகிதர்கள் என்று சொல்லுகிற வர்களின் நட்பு எவ்வளவு பொய்ம்மை நிரம்பியது. சத்ருக்களின் விரோதத்திலேயும் உண்மையில்லையே என்ற விஷயங்களை எல்லாம் மனத்துள் சிந்தித்துப் பார்த்தோமானால் தானாகவே சிரிப்பு வந்துவிடும்.

சிரிப்பதற்குக் காரணம் என்று ஒன்றைத் தேட வேண்டிய அவசியமே இராது. இந்த அரிய உண்மை களைத்தானே நமது தெய்வங்கள், நமது மூர்த்திகள் நமது முன்னோர்கள் அவரவர்கள் வாழ்க்கையிலே நமக்குக் காட்டிப் போயிருக்கிறார்கள்.

பிள்ளையார், தன் தாய் தந்தையரைப் பார்த்தே சிரித்தார். ஆனால் அவரையே சிரிக்க அடித்துவிட்டார்கள் பெண்கள். தமிழ் இலக்கியங்களில் இந்தத் தெய்வச் சிரிப்பு - விதம் விதமாக எல்லாம் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. உலகம் உய்ய நடம் ஆடிய அந்த நடனராஜனது உதடுகளிலே தவழ்வது ஒரு நல்ல குமிண் சிரிப்பு. இந்தச் சிரிப்பிற்கே அடிமையாகி விடுகிறார், அப்பர் பெருமான். அப்படியெல்லாம் பக்தர்கள் உளம் களிக்க மெய் சிலிர்க்கச் சிரித்த சிவபெருமானே, சிரித்தே அழிக்கிறார் திரிபுரத்தை. வாழ்விக்க உதவுவது போலவே அழிக்கவும் உதவுகிறது சிரிப்பு.

இந்த திரிபுரதகனத்தில் சிவபெருமான் சிரித்ததை விட அதிகோரமான சிரிப்பொன்றும், இலக்கியத்தில் இடம் பெற்றுத்தான் இருக்கிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் அருளிய ராமாயணத்திலே அந்தச் சிரிப்பு நித்யத்வம் பெற்றிருக்கிறது என்றால் கேட்பானேன்.

ராமகதைக்குள்ளே ஒரு குட்டிக் கதை. இரண்யன் சம்ஹாரக் கதைதான். சீதையை அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறான் ராவணன். அவன் செய்தது தவறு.