பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

43

கட்டியிருக்கும் சேலை காலிலே பாதசரம் எல்லாம் இருந்தது. சிலை எந்த மூர்த்தத்திற்காக எடுத்தது என்று எனக்கு விளங்கவில்லை. நண்பர்களை பார்த்து இச்சிற்பம் எந்த வடிவத்தை விளக்குகிறது என்று. உங்களுக்குத் தெரி கிறதா என்று கேட்டேன். அவர்கள் சிறிதும் தயங்காமல் இது அர்த்த நாரியின் வடிவம்தான் என்றனர். உடன் வந்திருந்த அர்ச்சகரும் ஆமா, ஆமா இது அர்த்த நாரீஸ்வர மூர்த்திதான் என்றார்.

நான் கேட்டேன். ஒற்றை மார்பகமும் உடுத்தியிருக் கும் ஆடையையும் வைத்து நீங்கள் இப்படிச் சொல் கிறீர்கள். அர்த்தநாரீஸ்வரருக்கு ஏது மூன்று முகம்; ஏது எட்டுக் கரங்கள் என்றேன். நண்பர்களும், அர்ச்சகரும் விழிக்க ஆரம்பித்தார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். ஆமா சார்! இவைகளை நாம் கவனிக்க வில்லையே. இது அர்த்த நாரீஸ்வர மூர்த்தம் போலவும் இருக்கிறது. அயனும் அரியும் அதனுள் அடங்கியவர்கள் தானே. அதனால் அர்த்த நாரீஸ்வரர் என்னும் அந்த மூர்த்தத்தில் பிரம்மாவையும், விஷ்ணுவையும் இணைத்து சிற்பி உருவாக்கி இருப்பாரோ என்று என்னிடம் கேட் டார்கள். எனக்கொன்றும் சொல்ல முடியவில்லை. ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியாமல் தஞ்சை திரும்பி னோம்.

வீடு திரும்பியதும், வீட்டில் இருந்த சிற்ப நூல்களை யெல்லாம் புரட்டினேன். இந்திய விக்கிரகங்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கும். T.A. கோபிநாதராவ் அவர்களின் புத்தகங்கள் நான்கையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தால், இப்படி ஒரு வடிவத்தை அவர் வெளியிடவும் இல்லை. அதற்கு விளக்கமும் கூறவில்லை. கஸ்யப சில்பம் என்னும் புத்தகத்தில் புரட்டினால் அங்கும் ஒரு விளக்கமும் கிடைக்கவில்லை.