பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

கோயிலிருக்கும். மன்னார் குடியில் உள்ள ராஜகோபாலன் தன் துணைவி செங்கமல வல்லியுடன் தன் பக்தன்

நாயக்க மன்னன் ஒருவனுக்காக இங்கே புறப்பட்டு வந்து விட்டார் என்று கர்ண பரம்பரை கூறும் அந்த ராஜ

கோபால சாமி கோயிலிலே தான் இருக்கிறான், இந்த திரிநேத்ர சதுர் புஜஅனுமன். எனக்கு தோன்றுவது என்ன வென்றால். இந்த அனுமனு பெருமையை உணர்ந்த மக்கள் அன்றே இந்த ஊருக்கு அனுமந்த மங்கலம் என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதைத் தான் நாம் அனந்த மங்கலம் என்று இன்று சொல்லி திருப்தி அடைகிறோம் என்பது தான்.

அறிவாலே, ஆற்றலாலே, அன்பாலே சிறந்தவன் அனுமன் என்று கண்டோம். அவனது பேர் உருவை கல்லிலே, மரத்திலே, செம்பிலே உருவாக்கி வழிபடவும் தெரிந்து கொண்டோம். அறிவு, ஆற்றல், அன்பு எல்லாம் கலந்த ஒரு கலவையை, கல், மரம், செம்பு என்னும் மூன்று பொருளிலும் கண்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கிறது நமக்கு. இதுபோதாதா என்று சொல்லத் தோன்றுகிறது எனக்கு.