பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோதையின் அழகிய கோலம்


எழில் உடைய அம்மனையீர்
தென் அரங்கத்து இன்ன முதர்
குழல் அழகர், வாய் அழகர்
கண் அழகர், கொப் பூழில்
எழுகமலப் பூ அழகர்
எம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும்
கழல்வளையே ஆக்கினரே

என்று பாடுகிறாள் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாம் ஆண்டாள். அரங்கனது அழகை இப்படி துணித்து நுணித்து அனுபவித்து இருக்கிறாளே, இவள் எவ்வளவு அழகு வாய்ந்தவளாக இருத்தல் வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக திவ்யப் பிரபந்தத்தைப் புரட்டினேன். கோதை தான் தன் அழகைப் பற்றிப் பேச நாணி நிற்கிறாள். நிற்கட்டும். இந்தப் பெரியாழ்வார் தன் மகள் அரங்கனிடம் கொண்ட காதலைப் பற்றியெல்லாம் பலபல சொல்லுகிறாரே அவராவது கோதையின் அழகைப் பற்றிச் சொல்ல மாட்டாரா என்று ஏங்கினேன். அவருமே 'கம்' என்று இருந்து விடுகிறார். பின்னர் திவ்ய சூரி சரிதையையும் குருபரம்பரைப் பிரபாவத்தையும் தேடி எடுத்துப் படித்தேன்.


பெரியாழ்வார் நந்தவனத்தில் களை எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கே திருத்துளாய் வேரின் கீழ் சுவர்ண கலசத்தில் காஞ்சன மயமான பசுங்குழந்தை