பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

69

பொருள் பெண்ணாக, இறைவியாகத்தான் இருக்கிறாள் என்று. இவர்களுடைய விவாதம் தீர்ந்த பாடாக இல்லை.

கடைசியில் இருவருக்கும் பிறக்கிறான் ஒரு பிள்ளை. அவன் வளர்ந்து பெரியவன் ஆகிறான். அவனிடமே சொல்கிறார்கள், தங்கள் விவாதத்தை. அவனிடம் கேட்கிறார்கள் விடையை. அவன் சொல்கிறான். கடவுள் தாயாக இருக்கிறாள் என்று. மேலும் சொல்கிறான் இறையிடத்தில் ஆண்மையுமில்லை, பெண்மையும் இல்லை. தாய்மை தான் நிறைந்திருக்கிறது என்று; உண்மைதானே. இந்தப் பிள்ளையின் கண்கண்ட தெய்வம் தாய் தானே. அந்தத் தாய் சுட்டிக் காட்டிய பின் தானே தந்தையைத் தெரிந்து கொள்கிறான். அன்னையிடம் அன்பைப் பெறுகிறான். அப்பனிடம் அறிவைப் பெறுகிறான். அன்பைச் சொரிபவளாக அம்மையும் அறிவை வளர்ப்பவனாக அப்பனும் அமைகிறார்கள். அதனால்தான் கடவுளை மனிதன் முதன் முதலில் வழிபடத் தெரிந்தது தாய் உருவில் தான்.

பால் நினைந்து ஊட்டும் தாயின் அன்பைக் கசிந்து கசிந்து பாடிய மாணிக்க வாசகர் மேலும் இறைவன் அருளை நினைந்து,

தாயாய் முலையைத் தருவானே

தராது ஒழிந்தால், சவலையாய்

நாயேன் அழிந்து போவேனே.

என்று இரங்குகிறார். இன்னும் நாவுக்கரசராம் அப்பரும்

தாயவள் காண் உலகிற்குத்

தன் னொப்பில்லாதத்துவன் காண்

என்று பாடிப்பாடி மகிழ்கிறார். இப்படி தாயான தத்துவனுக்கே இறை வழிபாடு, மனிதன் உள்ளத்தில்