பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

93


ஆனால் அந்த மூன்றாவது நபர் இருக்கிறாரே, எல்லோருடைய பேச்சையும் மெளனமாகவே கேட்டு விட்டு கடைசியில் சொல்கிறார் 'உண்மை தான், நேரிலே காண்பது கல். அறிவாலே தெரிந்து கொள்வது கலை. ஆனால் இந்தக் கல்லுக்குள் கனியாகவும், கலைக்குள் கடவுளாகவும் காண்கிறோமே அந்தத் தெய்வத் தன்மை, அதற்கென்ன சொல்வது' என்கிறார். ஆம் அவர் சொல்வது தான் எவ்வளவு பொருத்தம்.

கண்டு அறியாதவற்றைத் தானே காண்கிறார் அவர். நாமும் அவருடன் - அப்பருடன் சேர்ந்து கண்டறியாதன கண்டேன் என்று பாடி மகிழலாம் அல்லவா! அப்படியே பாடித் துதிப்போம் நாம் எப்போதும்.