பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆண்டவன் வடிவிலே ஒரு ஐயம்!

ன்று இறை வழிபாட்டில் நம்பிக்கையுடைய அன்பர்கள் எல்லாம் அவரவர் வீட்டில் விக்ரஹங்களையோ, இல்லை. திரு உருவப் படங்களையோ வைத்துப் பூசை செய்து வருகிறார்கள். இந்த ஆத்திக அன்பர்கள் இடையே ஒரு பிரச்சனை, யார் யார் படங்களைப் பூசைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று; இதைவிட யார் யார் திரு உருவை வைத்துக் கொள்ளக் கூடாது என்று; விநாயகரை வைத்துக் கொள்ளலாம், வள்ளி தெய்வானையோடு கூடிய குமரனை வைத்துக் கொள்ளலாம், அன்னை மீனாட்ஷியை, அகிலாண்டேஸ்வரியை இன்னும் தாயான அம்பிகை பலரையும் வைத்துக்கொள்ளலாம்.

கலைமகளை வைத்துக் கொள்ளலாம் அலைமகளை வைத்துக் கொள்ளலாம், ஆனால், நடராஜனையோ, பிக்ஷாடனனையோ, கஜசம்ஹாரனையோ இல்லை பழனியாண்டவனையோ வைத்துக் கொள்ளலாமா? என்பது கேள்வி. நடராஜன் ஒரு காலைத் தூக்கி இருக்கிறானே நம்மையும் காலை வாரி விட்டு விடுவானோ என்னவோ? என்று ஓர் அச்சம் பலருக்கு.

சம்ஹார மூர்த்தியையோ, பிச்சைக்குப் புறப்படு பவனையோ, எங்கு வைத்தாலும் வீட்டில் வைத்துக் கொள்ளுதல் கூடாது என்று ஒரு எண்ணம் சிலருக்கு.