பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 புலமை வேங்கடாசலம்


Confidential Cover : மந்தண உறை; இரகசிய உறை; கமுக்க உறை

Confidential Records : மந்தணப் பதிவுருக்கள்; இரகசிய பதிவணங்கள்; கமுக்கப் பதிவணங்கள்

Confidential Report : மந்தண அறிக்கை; இரகசிய அறிக்கை

Configuration : அமைப்பு

Confiscated Property : பறிமுதல் செய்யப்பட்ட சொத்து

Confiscation : பறிமுதல்

Consignee : சரக்குப் பெறுபவர்; பண்டம் பெறுபவர்

Consignment : அனுப்புச் சரக்கு ஒப்படைப்பொருள்

Consignor : சரக்கு அனுப்புபவர்

Consolidated certificate : தொகுக்கப் பெற்ற சான்றிதழ்; ஒருங்கிணைவுச் சான்றிதழ்

Consolidated Fund of India : இந்திய அரசுத் தொகுநிதி

Consolidated Fund of State : மாநில அரசுத் தொகுநிதி

Consolidated Preliminary List of Amendments : ஒருங்கிணைக்கப்பட்ட தொடக்கத் திருத்தப் பட்டியல்

Constituency : தொகுதி; வாக்காளர் தொகுதி

Constituent Assembly : அரசமைப்புச் சட்டப் பேரவை

Constitution : அரசமைப்புச் சட்டம்; உடல் கட்டமைவு

Constitutional Remedy : அரசமைப்புச் சட்ட தீர்முறை

Constitution and Management : அமைப்பும் மேலாண்மையும்

Constitution of India : இந்திய அரசியலமைப்பு; இந்திய அரசமைப்புச் சட்டம்; இந்திய அரசியலமைப்புச் சட்டம்

Consultation fees : கலந்தறி கட்டணம்

Consultative Committee : கலந்தாய்வுக் குழு

Consulting fee : அறிவுரைக் கட்டணம்

Consulting Engineer : கலந்ததி பொறியாளர்

Consumer : பயனீட்டாளர்; பயன்படுத்துபவர்; நுகர்வோர்

Consumer Goods : நுகர்பொருள்; பயன்படு பொருள்

Contempt of Court : நீதிமன்ற அவமதிப்பு

Contingency fund : எதிர்பாராச் செலவு நிதி

Contingent Bill : சில்லறைச் செலவினப் பட்டி