பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 41


Duplicate : இரட்டிப்பான படி; இரண்டாம்படி

Duplicate licence : உரிம இரண்டாம் படி; உரிமத்தினுடைய படி; மற்றொரு உரிமம்

Duplicating paper : படி பெருக்கு தாள்

Duplicator : படி பெருக்கி

Dust bin : குப்பைக் கூடை ; குப்பைத் தொட்டி

Dust proof : தூசி புகா ; தூசி புகாத

Duty : கடமை ; அலுவல்; தீர்வை ; சுங்க வரி

Duties imposed : விதிக்கப்பட்ட கடமை; விதிக்கப்பட்ட தீர்வை

Duty allowance : அலுவல் படி ; பணிப்படி

Duty chart : அலுவல் அட்டவணை

Duty free : தீர்வையில்லா

Dynamo : மின் ஆக்கப் பொறி

Dynasty : அரச மரபு

[E]

E-mail : மின் அஞ்சல்

Earned Leave : ஈட்டிய விடுப்பு

Earnest Money : பொறுப்புறுதிப் பணம்

Earnest Money Deposit : பிணை வைப்புத் தொகை

Earning Member : பொருள் ஈட்டுபவர்

Ecology : (உயிரின வாழ்க்கை ) சூழலியல்

Economic Advisor : பொருளியல் அறிவுரையாளர்

Economy Label : முகவரிச் சீட்டு

Editing : பதிப்பித்தல்; திருத்தி அமைத்தல்; தொகுத்தமைத்தல்

Editor : பதிப்பாசிரியர் ; இதழாசிரியர்

Editorial : தலையங்கம்

Education : கல்வி

Educational Officer : கல்வி அலுவலர்

Educational Trust : கல்விப் பொறுப்பாட்சிக் குழுமம்

Election : தேர்தல்

Election Commission of India : இந்தியத் தேர்தல் ஆணையம்

Election petition : தேர்தல் வழக்கு மனு

Election Tribunal : தேர்தல் தீர்ப்பாயம்