பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 புலமை வேங்கடாசலம்


அளித்தல்

Engine : பொறி

Engineer : பொறியாளர்

Engineering College : பொறியியற் கல்லூரி

Engineering Officer : பொறியாளர் தொடர்பு அலுவலர்

Engineering Section : பொறியியற் பிரிவு

Engineering Supervisor : பொறியியல் மேற்பார்வையாளர்

Enhancement of Sentence : தண்டனையை உயர்த்துதல்

Enquiry : விசாரணை; தகவல் அறிதல்; உசாவுதல்

Enquiry Counter : தகவல் அறியுமிடம்; தகவல் அளிப்பிடம்

Enrolment : பட்டியலில் சேர்க்கப்படுதல்

Entertainment : கேளிக்கை; பொழுதுபோக்கு; விருந்தளிப்பு

Entertainment and Amusement : கேளிக்கையும் வேடிக்கையும்

Entertainment Tax : கேளிக்கை வரி

Entomologist : பூச்சியிலர்

Entomology : பூச்சியியல்

Entrance Examination : நுழைவுத் தேர்வு

Entrance Ticket : நுழைவுச் சீட்டு

Entries for Good Services : நற்பணிப் பதிவுகள்

Entrusting of fund : நிதி ஒப்படைப்பு

Entry of Foreigners : அயல் நாட்டார் உட்புகுதல்

Enumeration : கணக்கெடுப்பு

Enumeration Form : கணக்கெடுப்புப் படிவம்

Enumerator : கணக்கெடுப்பவர்

Envelope : உறை

Environment : சுற்றுப்புறம்; சூழல்

Envoy : தூதர்

Epigraphist : கல்வெட்டு ஆய்வாளர்

Epigraphical Attender : கல்வெட்டுப் பணியாள்

Equal installment : சம தவணை

Equipment : தளவாடம்

Equipment Grant : தளவாட மானியம்

Equipment Register : தளவாடப் பதிவேடு

Errata List : பிழை திருத்தப் பட்டியல்

Error Message : பிழைச்சுட்டும் செய்தி