பக்கம்:ஆண்டாள்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
126
ஆண்டாள்
 


பொருப்பன்ன மாடம்பொ லிங்து தோன்றும்

புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை

விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார்

விண்ணவர் கோனடி நண்ணுவாரே'

வேதவாய்த்தொழி லார்கள் வாழ் வில்லி புத்துர்மன் விட்டு சித்தன்றன்

கோதைவாய்த்தமிழ் வல்லர்குறை

வின்றிவைகுந்தம் சேர்வரே"

பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த

புதுவையர் கோன்பட்டன் கோதை

இன்னிசை யால்சொன்ன மாலை

ஈரைந்தும் வல்லவர் தாம்போய்

மன்னிய மாதவ னோடு

வைகுந்தம் புக்கிருப் பாரே'

ஊடல் கூட லுணர்தல் புணர்தலை

நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்

கூட லைக்குழற் கோதைமுன் கூறிய

பாடல் பத்தும் வல்லார்க்கில்லை பாவமே'

பண்ணுறு நான்மறை யோர்புது வைமன்னன்

பட்டர்பி ரான்கோதை சொன்ன

நண்ணுறு வாசக மாலைவல் லார் நமோ

நாராய னாயவென் பாரே'

ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை

வேயர்பு கழ்வில்லி புத்துர்க்கோன் கோதைசொல்

தூயதமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்

வாயுநன் மக்களைப் பெற்றும கிழ்வரே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/128&oldid=524719" இருந்து மீள்விக்கப்பட்டது