பக்கம்:ஆண்டாள்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

129


என்று பாடிய அளவில், கணிகண்ணனின் கவினுறு தமிழுக்கும் பெட்புறு பக்திக்கும் உருகிநின்ற காஞ்சியுறை மணிவண்ணப் பெருமாள் அவ்வடியார் பின்னாலேயே அவ்வூரை விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டாராம். மறுநாள் திருக்கோயிலில் பெருமாள் இல்லாமை கண்டு மக்கள் மன்னனிடம் உரைக்க, மன்னன் நிகழ்ந்தது அறிந்து, தன் தவற்றினை உணர்ந்து, கணி கண்ணனாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளக் கணி கண்ணனும் பின்வருமாறு பாடினாராம்.

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவன் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்18

இவ்வாறு ஒரு கதை வழங்குகின்றது. இக்கதை கொண்டு பைந்தமிழின் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலாகத், திருமால் விளங்கும் திறம் தெளிவுறுகின்றது.

இனிக் கோதைப்பிராட்டியார் உரைத்துன்ள கோதில் தமிழ் உள்நுழைந்து காண்போம்.

சைவ உலகில் காரைக்காலம்மையாரைக் குறிப்பிடும் பொழுது,

பிறந்துமொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்து கின்சேவடியே சேர்ந்தேன்19

என்பதாகக் குறிப்பிடுவர். எனவேதான் காரைக்காலம்மை யாரின் இறுதிக் காலத்தே திருவாலங்காட்டு அண்ணல் அவரை "அம்மையே" என்று விளிக்கும் பேறு பெற்றார். இது போன்றே நம் கோதையாரும் தாம் இயற்றியருளிய நாச்சியார் திருமொழியின் முதற்பத்திலேயே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/131&oldid=1462133" இருந்து மீள்விக்கப்பட்டது