பக்கம்:ஆண்டாள்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
134
ஆண்டாள்
 


இன்றுமுற்றும் முதுகுநோவ

இருந்திழைத்த இச் சிற்றலை, கன்றுகண்ணுற நோக்கிநாங்கொள்ளும் ஆர்வங் தன்னைத் தணிகிடாய், அன்றுபாலக னாகியாலிலை

மேல்துயினறவெம் மாதிரியாய் என்றுமுன்றனக் கெங்கள் மேலிரக் கம்மெழாததெம் பாவமே'

வண்டல் நுண்மணலைக் கொண்டு தம் கைகளால் தொல்லை மேற்கொண்டு தாங்களே ஆக்கிய சிற்றிலைச் எவ்வகையிற் பார்த்தாலும் அருளுடைமை ஆகாது எனப் பேசுகின்றனர்.

கண்ணனோ மாயத்தில் வல்லவனாய் விளங்குகின்றான். நீலமேகக் கருநிற வண்ணனாய்க் கோலங்காட்டி நிற்கிறான். ஆனால் அவனுடைய பேச்சு, சிறுமியரைப் பித்தேறச் செய்விக் கிறது; அவன் செய்கை அவர்களை அவன்பேரில் மையல் கொளச் செய்விக்கிறது. முகமோ மாயஞ் செய்யும் முகமாகத் திகழ்கிறது; மாய மந்திரஞ் செய்கிறது அச்சுந்தர முகம். செந்தாமரைக் கண்ணனே! எங்கள் சிறுவீட்டினை வந்து சிதைக்கும் தொழிலைச் செய்யாதே.

பெய்யுமாமுகில் போல்வண்ணா! உன்றன்

பேச்சும்செங்கையும், எங்களை மையலேற்றி மயக்கவுன்முகம்

மாயமந்திரர் தான் கொலோ, நொய்யர்பிள்ள்ைக ளென்பதற்குன்னை நொவநாங்களு ரைக்கிலோம், செய்யதாமரைக் கண்ணினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலேே

நாளெல்லாம் உழைத்துப் பாடுபட்டுச் சிறுமியர் நுண்ணிய வெள்ளிய மணலைக் கொண்டு சிற்றிலை அமைத்துள்ளனர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/136&oldid=524727" இருந்து மீள்விக்கப்பட்டது