பக்கம்:ஆண்டாள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

141


மேலும், அன்புடையார் மனத்தேதான் ஆண்டவன் தங்குவான் என்பதனை எட்டாம் பாடலில் ஆண்டாள் அழகுற உணர்த்தியிருப்பதனைக் காணலாம்.

ஆவ லன்புடை யார்தம் மனத்தன்றி
மேவலன், விரை சூழ்துவ ராபதிக்
காவலன், கன்று மேய்த்து விளையாடும்
கோவ லன்வரில் கூடிடு கூடலே!39

"மன்னு பெரும்புகழ்" எனத் தொடங்குவது ஐந்தாவது பத்தாகும், "குயிற்பத்து" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் "கீதம் இனிய குயிலே" எனத் தொடங்கிப் பாடியிருக்கக் காணலாம். அதுபோல் ஆண்டாளும் "குயிற்பத்து" பாடியுள்ளார். இக்குயிற்பத்துள் நம் சிந்தையை முதலாவதாக அள்ளுவது இப்பாடல்களில் இடம் பெற்றிருக்கும் இயற்கை வருணனையேயாகும். குயில் வாழும் இடத்தைக் குயிலை விளிக்கும் போக்கிற் குறிப்பிடும் கோதையார் அக்குயிலின் இயற்கைச் சூழலை நயம்படக் கிளத்தியிருக்கக் காணலாம். இயற்கை வருணனைகள் சில வருமாறு:

புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
பொதும்பினில் வாழும் குயிலே40

கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடுங் குயிலே41

போதலர் காவில் புதுமணம் காறப்
பொறிவண்டின் காமரங் கேட்டு, உன்
காதலியோருடன் வாழ்குயி லே!42

கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை
கொள்ளு மிளங்குயிலே43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/143&oldid=1462637" இலிருந்து மீள்விக்கப்பட்டது