பக்கம்:ஆண்டாள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14
ஆண்டாள்
 


மதிலும் மண்டமுமாகி யமைந்த கோயில்கள் இயைவதன் முன்னர் பழந்தமிழர் ஆலமர நீழலிலும் கடம்பமர நீழ்விலும் யாற்றிடைக் குறையிடத்தும் குன்றத்தின் மிசையும் பிறவிடத்தும் நிலையுரு நிறுத்தியும் அஃதின்றியும் இறைவனை வழிபட்டு வந்தனர்.

  காடுங் காவும் கவின்பெறும் துருத்தியும் 
  யாருங் குளனும் வேறுபல் வைப்புஞ் 
  சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பு 
  மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையிலும்
              - திருமுருகாற்றுப்படை

எனும் திருமுருகாற்றுப்படை அடிகளால் இயற்கை வனப்பு எவ்வெவ்விடத்துளதோ அவ்வவ்விடத்திலெல்லாம் தமிழ் மக்கள் இறையை முன்னிட்டு வழிபாடியற்றினரென்பது அறியக் கிடக்கின்றது என்பர். (ந. சி. கந்தையாபிள்ளை, அறிவுரைக் கோவை, ப.35)

இவ்வாறு வழிமட்ட மக்கள் சிறிது சிறிதாகப் பண்பட்டு, பதப்பட்டுச் சமயவழிபாட்டில் சில வளர்நிலைகளைக் கண்டனர். ‘சமயம்’ என்ற சொல்னுக்கே சமைந்தது-நன்கு பக்குவப்படுத்தப்பட்டது - பதப்படுத்தப்பட்டது என்னும் பொருள்களைக் கொள்ளலாம். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலுக்கும் பிரமன், திருமால், சிவன் என்னும் மூன்று கடவுளரைத் தலைமையாகக் கொண்டனர்.

சைவமும் வைணவமும்

தமிழ்நாட்டிலே பக்திமணம் கமழச் செய்த பெரியோர்களில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் பாடுவதையே மாணியாகக்கொண்டு இறைவன்மீது அன்பு பூண்டொழுகியயர்கள். தமிழ் நாட்டில் சைவமும் வைணவமும் செழிந்தன. அந்தக் காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/16&oldid=723337" இருந்து மீள்விக்கப்பட்டது