பக்கம்:ஆண்டாள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

ஆண்டாள்


இராமன் முடிபுனைவதற்கு முன் கைகேயி ஏவல்வழி அவளைக் காணச் செல்கிறான். அவனைத் தேரோடும் தெருவிற் கண்ட நிற்கும் திரளான மங்கையர், "இராமன் செங்கோலன் என்கிறார்கள்; ஆனால் எங்களைப் பொறுத்த வரையில் அவள் கடுங்கோலனே. காரணம், எங்கள் காதலை ஏற்று எங்கள் துன்பத்தைப் போக்கும் அருளுடைமை அவன்பால் அமைந்திருக்கவில்லை என்று கூறுவதாக நயம் மிக்கதோர் பாடலைக் கம்பநாடார் அமைத்துள்ளார். அப்பாடல் வருமாறு:

அங்கண னவனி காத்தற் காமிவ னென்ன லாமோ
நங்கணன் பிலனென் றுள்ளத் தள்ளுற நடுங்கி நைவார்
செங்கணுங் கரிய கோல மேனியுங் தேரு மாகி
எங்கணுங் தோன்று கின்றார் எவரோ விராம னென்பார்97

இதே போக்கில் ஆண்டாளும் நயம்படக் கிளத்தல் என்னும் விரகமைத்துச் சில பாடல்களைப் பதினோராம் பத்திற் பாடியுள்ளார். அவர்தம் விழுமிய கற்பனையினையும் குழந்தைத்தனமான பேச்சினையும் இப்பத்திற் கண்டின்புறலாம்.

"அலையெறியும் கடல்சூழ்ந்த இம்மண்ணுலகையும் பாகவதர்களுக்கு மாறா மகிழ்ச்சி நல்கும் பரமபதத்தையும் சிறிதும் குறைவு வராதபடி நிர்வாகஞ் செய்துகொண்டு போகிற எம்பெருமாள் செங்கோல் செலுத்தலில் வல்லவராய்த் திகழ்ந்தும் அத்திருவரங்கனார் போயும் போயும் என் கைவளைகளாலே தம் குறைகளெல்லாந் தீர்ந்து நிறைவு பெறுவரென்றால்-என் வளைகளைக் கொள்ளை கொண்டு அவர் நிறைவு பெறுவரென்றால்-அவ்வாறு பெற்றுவிட்டுப் போவாராக,"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/166&oldid=1462167" இலிருந்து மீள்விக்கப்பட்டது