பக்கம்:ஆண்டாள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா. 28

உலகில் மலைகள் பல உள. அவற்றுள் மக்களுக்குப் பயன் அளிக்குங் குன்றுகள் மிகச் சிலவே. அவற்றுள்ளும் கடவுளர் விரும்பியுறையுங் குன்றுகள் இன்னும் மிகச்சிலவே. அக்குல வரைகள் சிலவற்றுள்ளும் கல்லென அறையுங் கடலும் கானலும் போல வேறுவேறாகிய நிறத்தினையும் பிரிவில்லாத சொல்லும் பொருளும் போல வேறுபடாத எழிலினையுமுடைய மாயோனையும் தம் முன்னோனையுந் தாங்கும் நீண்ட நிலைமையினையுமுடைய புகழான் உயர்ந்த இருங்குன்றம் சிறந்தது. அஃது அரிதிற் பெருந்துறக்கத்தை எளிதிற்பெறச் செய்வது; அதனான். திருமாலிருஞ் சோலையை வழிபடுவோம் என்று புலவர் இதில் கூறுகின்றார்."

இவ்வாறு சொல்லுமிடத்துப் பலதேவரோடு பீதாம்பரத்தை அணிந்து திருமால் நிற்கும் நிலையும், உள்ளன்போடு அவ்விருவரையும் தொழும் முறையும் கூறப்படுகின்றன." இதனால் இதைப் பாடும் இளம்பெருவழுதியார் காலத்தில் பலதேவரோடு கண்ணன் திருமாலிருஞ்சோலையில் கோயில் கொண்டிருந்தனர் என அறிகிறோம். ஆனால் ஆழ்வார்கள் காலத்தில் திருமால் தனியே கோயில் கொண்டிருந்ததாகத்தான் கூறப்படுகிறது. "இப்பாண்டிய குலத் தோன்றல் ஆழ்வார்களளவு ஆர்வத்தோடு குழைந்து பாடுவது படித்தின்புறத்தக்கது. பரிபாடல் காலத்திலேயே வைதிகமுறைக் கேற்பவும், வைணவ ஆகம முறைக் கேற்பவும் திருமால் கோயில்களில் வழிபாடுகள் நடந்து வந்தன" என்னும் கூற்று சிந்தித்தற்குரியதாம்." (எம். ராதாகிருஷ்ணபிள்ளை. தமிழும் வைணவமும், பக் 18-19

மாஅ யோயே மாஅ யோயே மறுபிறப்பு அறுக்கு மாசில்சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே

என்னும் அடிகளால், நீலமணியின் நிறத்தையொத்த திருமேனியைக் கொண்டு விளங்கும் மாயோனுடைய திருவடிகளைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/25&oldid=954805" இலிருந்து மீள்விக்கப்பட்டது