.
டாக்டர். சி. பா. 35
இவ்வாறெல்லாம் கடவுள் வழிபாடு தோன்றிய கால முதல், திருமால் வழிபாடு வழிவழிப் போற்றப்பட்டு வருவதை இலக்கியங்கள் ஏற்றமுற எடுத்துக் காட்டுகின்றன.
சங்ககாலத்திற்குப் பின்னர் வடநாட்டிலிருந்து தெற்கே பரவிய சைன பெளத்த சமயங்களால் வைணவ சமயம் நலிவு அடையத் தொடங்கியது. சைன பெளத்த சமயத்தார் பின் பற்றி வந்த கடுநோன்புகளும் மந்திர தத்திரங்களும் அக் காலத்து மன்னர்களின் பேராதரவைப் பெற்றன. இதனால் வேள்வி முதலிய சடங்குகளில் பற்றுக் கொண்டொழுகிய வைதிக மதம் தளர்வடைய நேர்ந்ததென்பர்..(ஜி. எத்திராஜுலு நாயுடு, பக்திப் பூங்கா, ப. 8)
பல்லவ மன்னர்கள் புறச் சமயங்களை விட்டு, அகச்சமயங்களாகிய சைவ, வைணவ சமயங்களைத் தழுவினர். மகேந்திரவர்மனும், மாமல்லனும் இச்சமயங்களுக்குப் புத்தாக்கம் செய்யும் பெருமன்னர்கள் ஆயினர். கைலாசநாதர் கோயிலும், வைகுண்டப் பெருமாள் கோயிலும் காஞ்சிபுரத்தில் இருசமயப் பற்றுடனும் எழுந்த இரு விண்ணகரங்களாகும்.
இக்காலத்தில்தான் அத்வைத சமயத் தோற்றுவிப்பாளரான ஆதிசங்கராசாரியார் தோன்றி ஞான மார்க்கத்தை நயமுடன் அறிவுறுத்தி நாடெங்கும் பரப்பி வந்தார்.
மறுமலர்ச்சி
அன்புநெறியே உய்ய வைக்கும் உயர்ந்த நெறி; முக்திக்குக் குறுக்கு வழி பகவத் பக்தியே என்று கருத்துப் பரப்பல் செய்ய முன்வந்த ஆவார்கள், நாயன்மார்கள் தோன்றிய காலமும் இதுதான். இவர்களது பாடல்கள் உறங்கிக் கிடந்த கடவுள் உணர்ச்சியை உலுப்பிவிட்டன; பக்திச்சுவை, கவிச்சுவை, இசைச்சுவை ஆகிய முத்திறமும் சேர்ந்து மக்கள் உள்ளத்தில் ஒர் எழுச்சியை உண்டாக்கி மறுமலர்ச்சியை மலர்வித்தன,
ஆ. -2