பக்கம்:ஆண்டாள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

27


பொருந்தும் 'ஒப்புயர்வற்ற இவ் வாழ்வார்கள் உயர்வற வுயர்நல மு-டையவனும், அயர்வறு மமரர்கள் அதிபதியுமான சர்வேஸ்வரனால் பக்தியும் ஞானமும் அருளப்பெற்று உலகுய்ய வந்த உத்தமர்கள் என்பது வைணவ சமயப் பெரியோர்களின் சித்தாந்தம்' என்பது நோக்கத்தக்கது." (காழியூர் சேஷாத்திரி மணவாளன், இராமாநுஜர் ப. 119)

இவர்கள் 'ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டாம்' என்ற கொள்கையினையுடையவர்கள். ஆகவே மக்களை இவர்களுடைய இந்தக் கொள்கை ஆட்கொண்டது. மக்களுக்கு இவர்களால் அமைதியான உலக வாழ்க்கைக்குத் தெய்வ அருள் இன்றியமையாதது என்ற உணர்ச்சி உண்டாயிற்று.

நாவுண்டு, நீயுண்டு,நாமம் தரித்தோதப் பாவுண்டு: நெஞ்சே பயமுண்டோ? - பூவுண்டு வண்டுறங்கும் சோலை மதிளரங்கத்தே உலகை உண்டுறங்குவான் ஒருவன் உண்டு

என்ற மெய்ம்மையை மக்கள் இடையில் இவர்கள் எடுத்துப் பாடியபோது, துன்புற்ற மக்களின் தீராத இடுக்கண்-மனப் போராட்டம் ஆகியவை தீர வழி கிடைத்தது என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட வழி வகுத்தனர்.

மனமாசற்ற நிலையில் மெய்யன்புடன் திருமாலைச் சரண் அடைந்தால் முக்தி பெறலாம் என்பது ஆழ்வார்களின் கொள்கை. இவர்கள் தாம் கண்டுணர்ந்த கொள்கைகளையும், பகவத் கீதையின் எடுத்துரைகளையும் (உபதேசம்) தங்களின் அனுபவங்களையும் திவ்வியப் பிரபந்தப் பாடல்களாக அருளிச் செய்தனர்.

ஆழ்வார்களின் வைணவ சமய மறுமலர்ச்சி இயக்கம் 'சான்றோருடைத்தான்' தொண்டை நாட்டில் தொடங்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/29&oldid=954814" இலிருந்து மீள்விக்கப்பட்டது