பக்கம்:ஆண்டாள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

29


ஜீவாத்ம ஸ்வரூபம்-உயிர் நிலை பரமாத்மஸ்வரூபம்-இறை நிலை உபாய ஸ்வரூபம்-நெறி விரோதி ஸ்வரூபம்-தடை புருஷார்த்த ஸ்வரூபம்-வாழ்வினை

என்று வேறொரு வகையில் விளக்கலாம்.

இவற்றுள் உயிர்நிலையாளர் நித்யர், முக்தர், பக்தர், கேவலர், முமூகrஅ என ஐவகைப்படுவர். திருமகள் கேள்வனாம் நாராயணன் ஞான உருவமும் ஞானத்தைக் குணமாக உடையவனுமாவான். ஆகவே அவ் இறைவனுக்கே தொண்டனாகவும் (சேஷபூதனும்), பிறருக்கு வசப்பட்டவனாகவும் (பரதந்திரனுமாயுள்ளவனும்) உள்ளவன் ஆத்மா. அவ்னே 'ஆத்ம ஸ்வரூபம்' (உயிர் நிலை) எனப்படுவான்.

பரஸ்வரூபம் இறை நிலையாகும். இறை நிலை பரத்துவம், வியூகம். விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என ஐந்து வகைப்படும்.

பரத்துவம்-இறைவன் வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் நிலை வியூகம்-பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நிலை விபவம்-இராம, கிருஷ்ணாதி அவதாரங்கள் அந்தர்யாமி-அவன் நமக்கு உள்ளும் புறம்புமாக எழுந்தருளியிருக்கும் நிலை

அர்ச்சை-திவ்ய தேசங்களில் காட்சியளிக்கும் மூர்த்திகள் "ஆவர்ண ஜலம்போலப் பரத்வம்; பாற்கடல் போலே வியூஹம்; பெருக்காறு போலே விபவங்கள்; அதிலே தேங்கின மடு அர்ச்சாவதாரம்' என்கிறார் ஶீவசன பூஷண ஆசிரியர்.

இறை நிலை ஐவகை நிலைகளையும் குறிப்பனவாக இருந்தாலும் 'அர்ச்சையே' (இவ்வுலகத்தில் கோயில் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/31&oldid=954817" இருந்து மீள்விக்கப்பட்டது