உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

ஆண்டாள்


குண்டோ மனமே யுணர்ந்துபாா ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு40

- உபதேசரத்தினமாலை, 23

என்று உபதேசரத்தினமாலை (23) உணர்ந்து உரைக்கின்றது.

ஆண்டாள் பிறப்பு :

செந்தமிழ் தழைத்தோங்கிய நாடு பாண்டியநாடு. முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த திருநாடு அது. புலமையும் செல்வமும் வாய்ந்த பலரையும் வளர்த்த செவிலித்தாய்த் திருநாடு அது; புலமைச் செல்வியர் பலரையும் பெற்று இன்புறும் பெரும்பேற்றைப் பெற்ற இனிய நாடு பாண்டிய நாடு. அந் நாட்டின்கண் இறைத்தன்மை இயற்கையிலேயே பெற்ற ஊர் ஶீவில்லிபுத்துார். இவ்வூர் வைணவ சம்பிரதாயத்திற்கே அணியென மிளிர்ந்தது. மின்னனைய நுண்ணிடையார் கூந்தலில் நுழைந்த வண்டு இசைபாடும் வில்லிபுத்துார் என்று பெரியாழ்வாரால் புகழப்பெறும் ஊர்;41 அழகிய நடையுள்ள அன்னங்கள் எங்கும் சூழ்ந்து விளையாடும் வில்லிபுத்துார் என்று பின்னாளில் ஆண்டாளால் சிறப்பித்துக் கூறப்பெற்ற ஊர் ஆகும்.42 தென்பாண்டி நன்னாட்டுத் திருப்பதிகள் பதினெட்டனுள் எட்டாவது இது, மல்லிநாடு எனப் பெயர் பெற்றது. வேடுவன் வில்லி என்பான் அதைப் புதிதாகக் கண்டமையின் வில்லிபுத்துார் என்று பெயர் அமைந்தது.

பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுமை43

-நாச்சியார் திருமொழி. 1:10.

பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவை44

- ஷ,3:10

வேதவாய்த் தொழிலார்கள் வாழ்வில்லி புத்தூர்45

- ஷை 2:10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/34&oldid=957498" இலிருந்து மீள்விக்கப்பட்டது