பக்கம்:ஆண்டாள்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

65


முண்டு. "பச்ய நீலோத்பலத்வந்த்வர்த் நிஸ்ஸரந்தி சிதாச் சரா :" என்று அதற்கு உதாஹரணம் காட்டப் படுகிறது. இரண்டு கருநெய்தற் பூக்களினின்று கூரிய அம்புகள் கிளம்புகின்றன காண்’ என்று இதிற் சொல்லப் படுகிறது. இங்கு கருநெய்தற் பூவும் விவகழிதமன்று" நாயகியின் கண்களினின்று வெளி வருகின்ற கடாஷ பாதங்களைச் சொல்ல நினைத்தே இங்ஙனம் சொல்லப்பட்டது இதனைத் தமிழர் உருவகவுயர்வு நவிற்சியணி யென்பார்கள். திருப்பாவை முழுவதும் இவ்வலங்கார வகையில் அமைந்ததென்று அடியேனுடைய அபிப்பிராயம்.'" -

(திருப்பாவை, முன்னுரை, பக். 2.3)

"இதில் ஏழாவது பாட்டில் "கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே என்று சொல்லப்படுகிறது. பேசின. பேச்சு கேட்டிலையோ' என்றால் போதும். நான் சொல்லுகிற வார்த்தையைக் கேள், என்றும், 'நான் சொல்லுகிற வார்த்தை உன் காதில் விழவில்லையா என்றும் இப்படித் தானே உலக வழக்குள்ளது. இந்த ரீதியில் பேசின பேச்சு கேட்டிலையோ என்ன ப்ராப்தமாயிருக்க பேச்சு அரவம் கேட்டிலையோ என்றது விசேஷமான கருத்தையுடையது. கேட்பதில் ரஸமில்லை; பேச்சிலிருந்து தோன்றுகிற (அரவம்) த்வனிப் பொருளைக் கேட்டுணர்வதுதான் சுவை மிக்கது என்று ஆண்டாளே காட்டியிருக்கின்றாள்.'

மார்கழித் திங்கள் குறித்துப் பின்வரும் கருத்துக்கள் வடமொழிச் சுலோகங்களாற் பெறப்படுகின்றன. * * *

"தனுர் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது விடியற் காலையில் எழுந்து குளித்துவிட்டு காலைக்கடன்களை முடித்து எவனொருவன் நாராயணனைப் பூசிக்றன்றானோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/67&oldid=959390" இருந்து மீள்விக்கப்பட்டது