டாக்டர். சி.பா.
67
இவற்றின் எதிரொலியாகப் பல கருத்துகளைத் திருப்பாவையிற் காணலாம்.
"மார்கழி நோன்பு பற்றித் திருப்பாவை வியாக்கி யானத்தின் தொடக்கத்தே வியாக்கியானச் சக்கரவர்த்தி என அழைக்கப்பெறும் ஶீ பெரியவாச்சான் பிள்ளை "இந் தோன்புக்கு மூலம் என்னெனில் மீமாம்சையிலே ஹோயி திகரண நியாயத்தாலே சிஷ்டாசாரஸிந்தம். 'மேலையார் செய்வனகள்' என்று ஶீ ஆண்டாள் தானும் அருளிச் செய்தாள்" என்று எழுதியுள்ளார். இதனாற் பெறப்படுவது யாதெனில் மார்கழி நோன்புக்கு லேத விதியில்லையென்பதும். ஆன்றோர் அனுஷ்டானமே அதற்கு மூலமென்பதும் பண்டையோர் கொள்கை என்பது பெற்றாம்.
பாகவதம் தசமஸ்கந்தம் 22ஆவது அத்தியாயத்தில், கண்ணன் கோபியர் துகில் கவர்ந்த சரிதம் கூறுந்தொடக்கத்தே மார்கழி நோன்பு பற்றிய முக்கியமான செய்திகள் கூறப்பட்டுள்ளதனைக் காணலாம். பேராசிரியர் மு. இராகவையங்கார் அப்பாகவதப் பகுதிக்குப் பின் வருமாறு தமிழ் மொழி பெயர்ப்புத் தந்துள்ளார்.
'அரசனே! கோகுலத்துள்ள பெண்கள் ஏமந்த ருதுவின் முதல் மாதத்தில் (மார்கழியில்) காத்யாயனி பூஜையாகிய விரதத்தைத் தொடங்கி ஹவிஸ்ஸைப் புஜித்துக்கொண்டு அதனை நடத்தி வந்தார்கள். அருணோதயத்தில் அவர் எழுந்திருந்து யமுனா நதியில் ஸ்நானம் பண்ணி ஈர நுண்மணலால் காத்யாயனி தேவியின் உருவத்தைச் சமைத்து, சந்தனம் மலர் தூபம் தளிர் பழம் இவற்றாலும், சிறந்த நைவேத்யங்களாலும் அத் தேவியைப் பூஜித்தனர். 'காத்யாயனி ஏ மகா மாயே! மகாயோகினி! ஈசுவரி! உன்னை வணங்குகின்றோம்;
எங்களுக்கு நந்தகோபர் மைந்தனாகிய கண்ணனை நாயகனாக அருள்வீராக" - என்ற இந்த மந்திரத்தை ஜபித்தவர்களாய் அவர்கள் கண்ணனைத்