பக்கம்:ஆண்டாள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

79


மாஸ்த்தில். திருவாதிரை நாளிலே முறைப்படி நிகழும். இவ்வுற்சவம் பெண்களால் மட்டும் மிகுதியாகக் கொண்டாடப் படுகின்றது. உத்தேசம் ஒருநாள்தான் அது விசேடமாக நடை பெறும். இவ்விழா, புராணத்துக் கூறப்பட்டபடி, காமனுடைய அழிவுக் காலத்தைக் காட்டுகிறதென்பது ஜனங்களின் அபிப்பிராயம்...(காமனுடைய) துக்ககரமான கதையானது ஞாபகத்தில் வைக்கப்பட்டு முக்கியமாக ஸ்திரீகளால் வருஷத்துக்கொருமுறை'விசேஷ உற்சவமாகக் கொண்டாடப் படுகிறது. குறித்த நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே இவ்வுற்சவம் தொடங்கப் பெறும். காலை நாலுமணிக்கே பெண்களெல்லாம் படுக்கைவிட்டெழுந்து ஆசார முறைப்படி தடாகங்களில் ஸ்நானம் செய்வார்கள். அவருள்ளும், பாலப் பருவமுள்ள பெண்களே கூட்டங் கூட்டமாகச் சேர்ந்து நீராடுதல் அதிகம். அக்காலங்களில் எல்லோரும் தண்ணிருக்குள் மூழ்கி உற்சாகமாகப் பாடுவர். அப்பாட்டு, யாரேனும் ஒருபெண்ணால் கருதியை அநுசரித்து மன்மதனைக் குறித்து ஆரம்பிக்கப்படும் இந்தப் பாட்டு, பெண்கள் தம் கைகளால் தண்ணிரைத் தட்டுவதனால் உண்டாகும் ஒரு விசேஷ சப்தத்தை அநுசரித்து நிற்கும். அவர்கள் இடக்கையை மூடித் தண்ணீர் மட்டத்திற்குக் கீழே ஜலத்தில் அமிழ்த்துக் கொண்டு வலது உள்ளங்கையைச் சாய்ப்பாக அடித்து இந்தத் தாளத்தை உண்டாக்குகின்றனர். இப்பெண்கள் பாடுங்கால முழுதும் இவ்வாறு சத்தம் செய்யப்படும். இத்தகைய தாளத்துடன் ஒரு பாட்டு முடிந்ததும் மற்றவரும் அதனைப் பின் தொடர்ந்து பாடியும் சிறிதுநேரம் இவைப்பாறி மறுபடியும் அதனைத் தொடங்கியும் இவ்வாறு முறை வைத்துக் குதூகலிப்பது வழக்கம். இவ்விதமாக அருணோதய காலம் வரை பெண்களெல்லாம் காலத்தைப் போக்கி உடம்பை நன்றாகத் துடைத்துக் கொண்டு சுத்தமும் மிக்க அலங்காரமு முள்ள ஆடைகளை உடுத்தும், கண்களுக்கு அஞ்சனந் தீட்டியும் நெற்றிக்குறி தரித்துக் கொண்டும். தாம்பூல தாரணஞ் செய்தும் விளங்குவார்கள். பிறகு எல்லாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/81&oldid=1155870" இருந்து மீள்விக்கப்பட்டது