உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

ஆண்டாள்


பெண்களும் உற்சவத்தில் முக்கியமாக நடைபெறும் ஊஞ்ச லாட்டத்தைத் தொடங்குவார்கள்.

"இவ்வாறு ஸ்நானம் செய்வதும் பாடுவதும் ஊஞ்சலாடுவதும் உற்சவக் கடைசி நாளோடு முடிவு பெறும். ஆனால், இக் கொண்டாட்டமானது இறுதி நாளிற்றான் விசேடமாக நடை பெறுவதாம். உற்சவ முடிவில் காலையிலே எல்லாப் பெண்களும் ஸ்நானஞ் செய்தபிறகு கொஞ்சம் வெள்ளம் குடித்துவிட்டுப் பகலில் ஒரு பெரிய விருந்து நடத்துவார்கள். அவ்விருந்தில் உயர்ந்த மலைப்பழங்களும் சர்க்கரை கலந்த சீந்திற்பாயஞ்மும் உண்ணப்படும். அஸ்தமனம் வரையிற் கொண்டாட்டமும் ஆடல்பாடல்களும் நடைபெறும். விஷு, ஒணம் என்ற திருவிழாக்களிற் புருஷர்கள் எவ்வாறு மாலையில் வந்திருப்பது அவசியமோ, அவ்வாறு இத் திருவாதிரைத் திருவிழாவிலும் வந்திருத்தல் அவசியம். அப்படிச் செய்யத் தவறிய புருஷர் செயலை, தங்கள் ஸ்திரீகளை விட்டுப்பிரிந்து போவதற்கு அடையாளமாகக் கருதுவார்கள். மார்கழி மாதத்துப் பனியுறைப்பதும் கீழ்க்காற்றின் குளிர்மிகுதியும் பெண்களின் மெல்லிய மேனிகட்கு மிக்க துன்பத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தும். இம்மகோற்சவத்தில், காலை யில் நீராடுவதிலும் அந்நீராட்டத்தில், ஆடல்பாடல் நிகத்துவதிலும் அதிக ஆனந்தத்தை அன்னோர் அடைகின்றனர். பணியின் உறைப்பால் காற்றில் இலை நடுங்குவது போலச் சரம் படபடத்துக் கொண்டிருத்தும் நீராடுகின்ற இக்கொண்டாட்டம் அவர்கட்கு அதிக மனோற்சாகத்தை அளிக்கின்றது. மலையாள நாட்டில் நடக்கும் இக்கொண்டாட்டத்தைப்போல வேறு எவ்விடத்துங் காண்பதரிது’ எனக் கண்டு கொள்க." (ஆராய்ச்சித்தொகுதி, பக். 201, 202).

மலையாள நாட்டில் இன்றும் மார்கழி நீராடும்பொழுது தண்ணீர்த் தடாகத்தில் தண்ணீரிற் பேரொலி எழுப்பிக் கொண்டு சேரநாட்டுச் செவ்வியர் முழ்கும் நிலையினையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/82&oldid=1155924" இலிருந்து மீள்விக்கப்பட்டது