பக்கம்:ஆண் சிங்கம்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன்

காது? பத்மாவுக்கு, பிறவியை விட உயர்ந்த மாப் பிள்ளை வேறே யாரு, எங்கிருந்து வந்து குதித்து விடப் போகிருளும்? ஆவுடையம்மாள் அவள் இயல்புப் படி அடுக்கிக் கொண்டிருந்தாள்.

ராமலிங்கத்துக்கு இதுதான் பேரிடியாக அதிர்ச்சி தந்தது. பத்மா~ அந்தப் பெண்; அவளும் இப்படிச் செய்வாளா?...பத்மா ஒரு துரோகி என்று கத்த வேண்டும் போலிருந்தது...அவனுடைய உள்ளமே அவனைக் கண்டித்தது. அவளேக் குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? நீ அவளே மணம் புரிய ஆசைப்படுகிருய் என்பது அவளுக்கு எப்படித் தெரியும்?

‘என்னுடைய ஆசையை நான் எனது ஆசைக்கு உரியவளிடம்கூட வெளிப்படையாகத் தெரிவிக்கத் துணியவில்லையே! என்று வருந்தினன் அந்த சங்கோஜி.

அதிர்ஷ்டம் துணிச்சல்காரர்களுக்கே துணைபுரியு மாம். காதல்கூட துணிவுள்ளவர்களுக்குத்தான் இனிய வெற்றி தரும். எவருக்கும் காத்து நிற்காத காலத்தை யும், அலையையும் போலவே காதலும் காத்துக் கிடப்ப தில்லை. அதன் வேகத்தோடு இணைந்து முன்னேறத் தயங்குகிறவர்கள் அதன் அருளேப் பெருமல், அதையே இழந்து விடுகிருர்கள்...

ராமலிங்கத்தின் மனம் ஞானஒளி பெற்றுக் கொண்டிருந்தது. அவன் காதுகளில் தாயின் பேச்சு விழாமலில்லை.

'உனக்கும் ஒரு இடத்திலே பெண் பார்த்திருக் கிறேன். பத்மா போல் அழகாக இல்லாவிட்டாலும், நல்ல குனம்! வீட்டு வேலை எல்லாம் நன்முகச் செய்யும்...'

பார்க்கலாம் என்று கூறிவிட்டு வெளியேறினன் ராமலிங்கம்.

இனிமேல் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? என்று கனத்தது அவன் மனக் குறளி, உரிய காலத்தில்

翼登盆