பக்கம்:ஆண் சிங்கம்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆண் சிங்கம்

சிங்காரம் பிள்ளை அண்ணுச்சி

‘வெறும் வீணப்பயல்’ என்று கைலாசபுரம் வாசி கள் ஒவ்வொருவரது மன்க்குறளியும் முணமுணக்கும். ஆளுல், வெளிப்படையாக, அவுகளைப்போலே உண் டுமா இந்தப் பூலோகத்திலே? அண்ணுச்சி பெரிய சிங்கமில்லே! என்று வாய் சொல் உதிர்க்கும். -

இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்று மில்லை, உள் ளொன்று நினைத்துப் புறமொன்று பேசுவதுதானே பண்பாட்டு உயர்வு என்று மக்களால் மதிக்கப்படு கிறது: . .

மேலும், சிங்காரம் பிள்ளை என்ருல் கைலாசபுரத் தினருக்கு உள்ளத்துக்குள் எப்பவும்ே உதைப்புத் தான். அவர் குடித்துவிட்டு நடுத்தெருவில் நாடகம் ஆட ஆரம்பித்து விட்டார் என்ருலோ, ஊராரின் உடலில் உதறல் கண்டுவிடும். - .

'கல்லுளி மங்கன் போன வழி; காடு மேடெல் லாம் தவிடு பொடி என்பார்கள். சண்டியரு சிங்காரம் வெறியிலே கிளம்பிவிட்டாரு. என்ன் என்ன நாசம் ஆகப்போகுதோ, யாரு கண்டார்கள்? என்று முனகியபடி, நல்லவர்கள் பெரியவர்கள் கதவை அடைத்து விட்டு, வீட்டுக்குள் ஒடுங்கிக் கொள்வார் శ : ,

சிங்காரம் பிள்ளையின் தோற்றத்திலே கூட அச்சம் எழுப்பும் ஒரு தன்மை கலந்து கிடக்கும். அரிவாள் மாதிரி காட்சி தரும் மிடுக்கான மீசை அந்த அச்சத்தை எழுப்புகிறதா? தீக்கங்குகள் போல் ஜிவு ஜிவு என்று விளங்கும் சிவப்புக் கண்கள் பயம் தருகின்ற்னவர்? ஆளின் உயரமும் பருமனும் அத் தன்மை பெற்ற னவா? யாரும் பிரித்துச் சொல்ல முடியாது. அவரது

106