பக்கம்:ஆண் சிங்கம்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்ஆகவே ஆங்கிலப் பதங்களைத் தாராளமாகத் தமது பேச்சிலே கலந்து அள்ளித் தூவுவார் அவர்.

பஸ் நிற்பதற்குள்ளேயே கீழே குதித்தார் பிள்ளை, டிரைவருக்கு ஒரு ஸலாம் அடித்தார்.’ தம்பியா, பிள்ளேய்! ஐயா கண்டக்டர் தம்பி! எப்புவுமே புது ஆளாக இருந்திராதேயும் வேய்’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும் ஆவர் ஏதாவ்து சொல்லியிருப்பார். அதற்குள் பஸ் வேகம் பெற்று ஓடி விட்டது...

ஒரு கடையை நோக்கிச் சென்றார் சிங்காரம் பிள்ளை. ‘தாகமாயிருக்குது, ஐஸ் போட்டுக் கலர் கொடு’ எள்று உத்தரவிட்டார். ..வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பையன் அவ்விதமே தந்தான். ஒரு பாக்கெட் சிகிரெட் என்றார் பிள்ளை. அதுவும் உடனே கிடைத்தது.

‘முதலாளி உங்களிடம் ஞாபகப்படுத்தும்படி சொன்னாங்க. பாக்கி அதிகமாக ஏறி விட்டதாம். சீக்கிரமே பார்த்து...’

பிள்ளையின் சிரிப்பு பையனின் பேச்சுக்கு பிரேக் போட்டது. ‘முதலாளிக்கே இதை சிங்காரம் பின்ளை கிட்டே சொல்ல முடியலியோ? இதை நேரே சொல்ல, அவனுக்குத் துணிச்சல் இல்லையா? அல்லது அவாளே சொன்னா கவுருதை எதுவும் குறைஞ்சு போயிடும்கிற, நெனைப்பா? எஹஹ்! சிங்காரம் பிள்ளைக்கே ஞாபக மூட்டுகிற அளவுக்குப் பெரிய மனுஷன் ஆகிவிட்டானா அவன்? வெறும் பய பிள்ளை!’ தமது ஆத்திரத்தைத் திரட்டிக் காறித் துப்பினார் பிள்ளை.

பையன் பயந்து விட்டான். ‘ஸார் நான் வந்து...’ –

பிள்ளையின் சிரிப்பு உருண்டு புரண்டது. ‘நீ ஒரு தப்பும் செய்யலே. நீ ஏன் பயப்படுறே? உன் முதலாளியிடம் நான் பேசிக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் அவர்.

111