பக்கம்:ஆண் சிங்கம்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


கப் பேசும் யுவதி வராமல் நின்றுவிட்ட பிறகே, அவள் என் பொழுதை எப்படிப் பொன் மயமாக்கிக் கொண்டிருந்தாள் என்பது புரிந்தது. அவள் வராததனால் வெறுமையாகி விட்ட காலம் சுமையாய்க் கனத்து தொங்கியதாகத் தோன்றியது. ‘உமா, நீ இனிமேல் வரவே மாட்டாயா?’ என்று ஏங்கியது என் உள்ளம்.

மறுநாள் அவன் வந்தாள்–இருட்டறையில் புகும் ஒளிபோல. ஒளி வெள்ளத்தில் மினுமினுக்கும் எழில் மலர்போல் திகழ்ந்தாள் அவள். என் உள்ளத்தைத் தாக்குகின்ற ஒரு படையெடுப்புமாதிரி வந்து, அசைந் தாடி, செயல் புரிந்த உமாவின் பார்வையும் சிரிப்பும் அசைவும் நெளிவும் என்னைக் கிளர்ச்சியுறச் செய்தன. ‘உமா, என்ன மன்னித்து விடு என்றேன்.'மன்னித்தோம்’ என்று ஒரு ராணியின் மிடுக்கோடு அவள் சொன்னாள். அருவியெனச் சிரிப்பை அள்ளித் தெளித்தாள். பிறகு, இயல்பான சுபாவத்தோடு பேச்சை எங்கெங்கோ திருப்பி விட்டாள். .

அவளுக்கு என் மீது அளவற்ற அன்பு என்று எனக்குப்புரிந்து விட்டது. எனக்கு அவளிடம் ஆசை ஏற்பட்டிருந்தது. அவளேக் காணமுடியாத நாளெல்லாம் பலனற்ற நாளே என்றும் பட்டது. என் வாழ்வைப் பயனுள்ளதாக, இனிமை நிறைந்ததாக மாற்றுவதற்கு அவள் என் துணைவியாக வேண்டும் என்று என் மனம் ஜபம் புரியத் தொடங்கியது.அவளுக்கும் அந்த ஆசை இருந்தது. அதை நான் சிறிது சிறிதாக உணர்ந்து கொள்ள முடிந்தது______

ஒரு நாள் உமா ஒய்யாரமாக வந்து நின்றாள். ‘இன்று என்னிடம் என்ன புதுமை சேர்ந்திருக்கிறது, சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்றாள். நான் அவளே மேலும் கீழுமாக நோக்கினேன். எனது தாமதத்தையும் மெளனத்தையும் பொறுக்க முடியாதவளாய் அவள் கத்தினாள்.'ஏ மக்கு கண்ணு கூடத் தெரியலியா என்ன?’ என்று கேட்டு, அவள் விரலால் கழுத்தைச் சுட்டினாள். மாம்பிஞ்சுகளைக் கோத்து

128