பக்கம்:ஆண் சிங்கம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன்

கருவியினல் பலமாகத் தாக்கினுன், தனது எதிரியை வ்ேரிலேயே கிள்ளி வீழ்த்த எறிகிற தாக்குதல்களே தன் கைவீச்சு ஒவ்வொன்றும் எனக் கருதின்ை. ஆவேசமாய் அலுவலில் ஈடுபட்டான் அவன்.

பூமிக் குடலின் இருள் ஆழத்திலே அழைதியும் அந்திக்ாரமும் நிறைந்த அடித்தலத்தில், டொக் டொக் என்று பாற்ைகளில் மோதிய இரும்பு ஆயுதங்கள் ஒலி எழுப்பின. கட்டிகள் விழும் ஓசை எழும்: பொடிகள் சரியும் சத்தமும், துண்டு துணுக்குகள் சித றும் ஒலியும் கலக்கும். மனிதர்கள் யந்திரங்களென உழைத்தாலும், மனிதர்கள் உள்ளத் துடிப்பும் எண் னும் திறனும் ஒடுங்கியா கிடக்கும்?

அவன் - அறுபத்தைந்தாம் நம்பர் கைதி - உழைத்துக் கொண்டிருந்தான். அவன் மனத்திரையில் அவனது வாழ்வுச்சரிதையின் சாயைகள் தொடர்பிலாப் புகை உருவங்களாய் தோன்றி மறைந்தன.

பூமியின் அடியில் இருள் நிலத்திலே விளையும் பொன்னைக் கொத்தி எடுக்க வேண்டிய நிலைக்கு அவன் வந்ததே ஆதியில் அவனைப் பற்றிய பொன்னுசை காரணமாகத்தான். திருட்டுக் கு ற் ற ம் அவனைக் கைதியாக மாற்றியது. கைதி நாளடைவிலே சுரங்கத் தொழிலாளியாக நேர்ந்தது.

அவனுக்கு நன்ருக நினைவிருந்தது - அவனுடைய முதல் திருட்டு; தெருவில் நடந்து கொண்டிருந்தான் அவன் ஒரு வீட்டு நடையில் குழந்தை ஒன்றிருந்தது. சின்னஞ் சிறு குழந்தை. அதன் அழகு அவனைக் கவர வில்லை. அதன் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி அவனை வசீகரித்தது. அவன் அதன் முகத்தைப் பார்த் தான். களங்கம் என்பது என்ன வென்றறியாத அக் குழந்தை செவ்விய அந்திவானில் தொத்திக் கிடக்கும் இளம் பிறை போன்ற சிரிப்பை நெளியவிட்டது முகத் தில். தான் கண்ட வேடிக்கை எதையோ அவனிடம் தன் சங்கேத பாஷையில் அறிவிக்க முயன்றது. அவன் அங்கு மிங்கும் பார்த்தான். மிரள விழித்தான். குழந்தை பயந்து அழக் கூடாதே என்பதற்காக அவனும்

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/34&oldid=543106" இருந்து மீள்விக்கப்பட்டது