பக்கம்:ஆண் சிங்கம்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

கைலாசத்துக்கு இயல்பாக ஏற்பட்டு விட்ட மன நோயாக இருக்கலாம் அது. உளப்பரிசோதனை நிபுணர் எவரிடமாவது அவன் முறையிட்டிருந்தால், அவர் அவனுக்குப் புரியாத பெரும் பெயர் எதையாவது குறிப் பிட்டு அந்த நோயை கெளரவித்திருப்பார்.

ஆனல், கைலாசம் ஒரு விசித்திரப் பேர்வழி. தனது மனநிலையைப் போற்றி வளர்க்கவே ஆசைப்பட்டான். வறண்ட அன்றாட வாழ்விலே. குளுமையும் இனிமையும் புகுத்த உதவும் சக்தியைத் தன் மனம் பெற்றுவிட்டதாக அவன் மகிழ்வதுமுண்டு,

வேடிக்கையான மனம்தான் அது.

கைலாசம் நடந்து கொண்டிருக்கிறான். வேக நடை... அவன் மனம் தடம் புரண்ட பாதையிலே ஒடுகிறது.

–நடப்பது சுலபமாகத் தோன்றுகிறது. ஆனால், மனிதன் நடை எனும் பாக்கியத்தைச் சுலபமாகவா பெறுகிறான்? இல்லையே.சிறு குழந்தை எழுந்து நின்று நடத்து பழக எவ்வளவு கஷ்டப்படுகிறது! இப்படி நடை பயில ஒவ்வொருவரும் எவ்வளவு பிரயாசைப்படுகிறார்கள்... ஒவ்வொருவர் நடை ஒவ்வொரு ரகம்...நடப்பது–ஒரு காலுக்கு முன்னே இன்னொரு காலை எடுத்து வைப்பது...ஆமாம். திடீர்னு இப்படி வைக்கும் திற மையை மனித வர்க்கம் இழந்து விடுகிறது என்று வைத் துக்கொள்வோம்...அட, சும்மனாச்சியும் வைத்துக் கொள்வோமே!...ஏதோ வியாதி வருகிறது; சிலர் ஞாபகசக்தியை இழந்து விடுகிறார்கள். பேச்சுத் திறனை இழக்கிறார்கள் சிலர். அதுபோல் ஏற்படுகிறது என்று நினையுமே! சடார்னு எல்லோரும் நடக்கும் வித்தையை மறந்து விடுகிறார்கள். அப்போ எப்படி இருக்கும்?

கைலாசம் விதம் விதமான காட்சிகளைக் கற்பனை செய்கிறான். அவனுக்குச் சிரிப்பு பொங்குகிறது...

கைலாசம் ஒரு நாள் திடீரென்று எண்ணுகிறான்–மனித வர்க்கம் மூளையால் உயர்ந்து விட்டது.

40