பக்கம்:ஆண் சிங்கம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

அவன் சாப்பிடுவதற்கு உட்கார்ந்திருக்கிறான்... தெருவிலே, அடுத்த தெருவுக்கும் அப்பால், கடற்கரை ரஸ்தாவின் எல்லையிலே அலைகள் வந்து எட்டிப் பார்த்து விட்டன. கடலும் கரைமணலும் ஒன்றேயாகி, ரஸ்தாவும் அதுவேயாகி, ஊரும் பிறவும் எல்லாமும் கடல் மயமாகப் போகிறது...அவன் கண்களில் தனி மினுமினுப்பு. உதடுகளில் சிரிப்பின் ரேகை, காதுகளில் இணையற்ற அந்த ஒசை...அவனுக்கு வேடிக்கை பார்க்கவேணும் என்ற ஆசை அடக்க முடியாதது ஆகிறது. அரைகுறைச் சாப்பாட்டிலேயே எழுந்து ஒடுகிறான் கைலாசம்.

அவனும் சிலரும் பேசிக்கொண்டிருக்கிருர்கள். சுவாரஸ்யமான உரையாடல். திடுமென அவன் கத்து கிறான் கொஞ்சம் நிறுத்துங்கள்!’...பேச்சு தடைப் படுகிறது. அவன் மகிழ்ச்சியோடு உற்றுக் கேட்கிறான். ‘உங்க்ளுக்குக் கேட்கவில்லை? அலேயோசை.அலைகள் வந்து கொண்டேயிருக்கின்றன...’ அவன் எழுந்து ஓடுகிறான்.

நண்பர்கள் பரஸ்பரம் அர்த்தம் நிறைந்த பார்வை பரிமாறிக் கொள்கிறார்கள். உதட்டைச் சுளிக்கிறார்கள்; தலையை ஆட்டுகிறார்கள். ‘ஐயோ பாவம்’

‘அறிவு முதிர்ச்சிக்கும் பைத்தியத்துக்கும் இடையிலே நுண்மையான கோடுதான் இருக்கிறது. ஒருவன் அறிவின் எல்லையைக் கடந்து எப்போது பைத்திய நிலையில் புகுவான் என்று சொல்ல முடியாது...’

‘பார்க்கப்போனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பைத்தியங்களாகத்தான் இருக்கிருர்கள்.’

நண்பர்கள் பேச்சுக்குப் பொருள் கிடைத்தது.

அவர்கள் பேச்சு அவன் காதிலும் எப்பவாவது விழுந்திருக்கலாம், எனினும் அவன் அதைப் பொருட் படுத்தியதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

44