பக்கம்:ஆண் சிங்கம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணின்

அனுதாபமாகவும் அன்பாக வும் பரிணமித்தது. குஞ்சுத் தம்பி - குட்டித் தம்பி என்று அவனை வாஞ்சையோடு கையைப் பிடித்து அழைத்துச் செல்வதும், விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள் வதும், யாராவது அவனைக் கேலி செய்தால் அவரோடு சண்டைக்குப் போவதுமாக வளர்ந்தான் பெரியவன். சின்னவனுக்கு அவனே துணை; தோழன்; நல்ல பாதுகாப்பு.

பிறவிப்பெருமாள் பிறவி முதலே மெலிந்தவனுகி விட்டதால் பெற்றேர் அவ்னிடம் அதிகமான செல்லம் காட்டினர். அதனுல் அவன் பிடிவாதமும் கர்வமும் டங்காப்பிடாரித் தனமும் பெற்றவனுக வளர லாளுன் நோஞ்ச மாட்டின் மேல்தான் ஈ அரிக்கும் என்பது போல அவனுக்கு அடிக்கடி ஏதாவது சீக்கு வந்து தொல்லை கொடுக்கும். இப்போ இவ்வளவு கஷ்டப்படுகிறதுக்கு, பின்னலே அவன் போடு போடென்று போடுவான். அதிர்ஷ்ட ஜாதகம் அவனுக்கு!’ என்று பாண்டியன் பிள்ளை பெருமை யோடு பேசுவார்.

அவருடைய வாழ்க்கையில் வரட்சி மிகுந்தது. அவருக்கு அர்த்தமற்ற ஆங்காரமும், காரணமற்ற கோபமும் தலை யெடுத்தன. மூத்த பையனின் கிரகக் கோளாறுதான் தமது தரித்திரத்துக்குக் காரணம் என்று நம்பி, அவர் அவனை ஏசுவார். அவன் சிறு தவறு செய்தாலும் பேயறை அறைவார். சின்னவனுக்கு ஒரு தடவைகூட அடி விழுவதில்லை. அவர் கோபமாக இருக்கிருர் என்று தெரிந்ததும், அவன் அம்மாவிடம் இடி, அவள் அரவணைப்பில் தன்னை மறைத்துக் கொள்வான். அவன் செய்யாத குற்றங்களுக்காக ராமலிங்கம் தண்டனை பெற நேர்ந்த சமயங்கள் பல பலவாகும்.

இளையவன் வளர வளர, குறும்புகள் செய்து மகிழக் கற்றுக்கொண்டதும், அவன் செய்யும் கல் லுளித்தனத்தினால் உதை கிடைக்கும் என்று நிச்சய மாகப் படுகிறபோது, அண்ணன் தலையில் பழியைப் போட்டுவிட்டுத் தான் தப்பித்துக்கொள்ளத் தயங்கி

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/98&oldid=543183" இருந்து மீள்விக்கப்பட்டது