பக்கம்:ஆதி அத்தி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஆதி அத்தி மிகுந்த பாக்கியம் செய்தவளுவேன், எனது கலைத் திறமையால் அந்தப் பரிசைத் தங்களிடம் வேண்டிப் பெறவே நான் இங்கு வந்தேன். கரிகாலன் : நீங்கள் கேட்டதும் அது உங்களுக்குக் கிடைக்கும். கேளுங்கள், இன்னும் தயக்கம் வேண்டாம். அத்தி : சோழ வேந்தே, நான் மறைவாக இந்த நாட்டிலிருந்து நாட்டியம் பயின்று கொண்டிருந்த காலத்திலே சேர நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்னுல் எனக்கு ஒரு பெரு வாய்ப்புக் கிடைத்தது. சென்ற ஆண்டு புதுப் புனலாட்டு விழாவின்போது தங்களுடைய மகள் ஆதிமந்தியின் நடனத்தை நான் கண்டேன். தங்கள் மகளின் நடனமும், பாட்டும், அழகும் என் உள்ளத்தை அன்றே கொள்ளை கொண்டு விட்டன. அவளைத் தாங்கள் எனக்கு மனைவியாக அளிக்கவேண்டும் என்று பணிவோடு வேண்டிக் கொள்கிறேன். கரிகாலன் : ஆட்டனத்தி, என் மகளும் உங்கள் கலைச் சிறப்பில் சிந்தை பறிகொடுத்து நிற்பதை நான் உணர்கிறேன். ஆதலால் உ ங் க ள் வேண்டுகோளை நிறைவேற்றுவதில் அவளுக்கும் மகிழ்ச்சியே ஏற்படு மென்று நான் திண்ணமாக நம்புகிறேன். (ஆதிமந்தியின் பக்கமாக அரசன் பார்க்கிருன். வேண்மாளும் ஆவலோடு பார்க்கிருள். ஆதி மந்தி நாணத்தோடு தலை குனிந்து புன்முறுவல் பூத்து நிற்கிருள்.) அதோடு ஆதிமந்தியும் நாணத்தோடு தலை குனிந்து தனது முழுச்சம்மதத்தையும் தெரிவிப்பதுபோல் நிற் கிருள். ஆட்டனத்தி, உங்கள் விருப்பத்தின்படியே அவளை உங்களுக்கு மனைவியாகத் தருகிறேன். வேண்மாள் உனக்கும் இது சம்மதந்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/25&oldid=742411" இலிருந்து மீள்விக்கப்பட்டது