பக்கம்:ஆதி அத்தி.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 ஆதி அத்தி அத்தி : நான் உனது நடனத்தையல்லவா சொல்லு கிறேன்? ஆதிமந்தி : இப்பொழுது நான் அபிநயம் பிடித்த தெல்லாம் நீங்கள் கற்றுக்கொடுத்ததுதானே? அத்தி : நாம் புதுப் புனல் விழாவிற்காக உங்கள் சோழநாட்டற்குப் போகும்போது நீ கட்டாயம் நடனம் செய்யவேண்டும். ஆதிமந்தி : நான......? பிறகு நீங்கள்? இனிமேல் உங்கள் நடனத்தையல்லவா அங்கே அனைவரும் எதிர் பார்த்திருப்பார்கள். அத்தி : நீ கூட இருக்கும்போது எனது ஆடலே உனது நாட்டார் மதிக்கவா போகிருர்கள்? உங்களுக்கு உங்கள் நாட்டுக் கலைதானே பெரிது? ஆதிமந்தி (சிரித்துக்கொண்டே) : ஒகோ நாளுடு வது மட்டமாக இருந்தாலும் எங்கள் நாட்டார் என் னுடைய ஆடலேத்தான் பாராட்டுவார்கள் என்கிறீர் களோ? அத்தி : மட்டமென்று நான் சொல்லவில்லையே? ஆதிமந்தி : உயர்ந்த கலே எங்கிருந்து வந்தாலும் சோழநாட்டார் அதைப் போற்றுவார்கள். எங்கள் நாட்டார் மிகுந்த பரந்த நோக்கமுடையவர்கள். அத்தி : உங்களுடைய பரந்த நோக்கத்தை அன்று பார்க்கலாமே? ஆதிமந்தி : அன்று பார்ப்பதென்ன? உங்கள் கலை யைப் பாராட்டித்தானே உயர்ந்த பட்டம் கொடுத்த தோடு அவர்கள் பெண்ணையும் கொடுத்தார்கள்? இதை விட வேறு சான்று வேண்டுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/33&oldid=742420" இருந்து மீள்விக்கப்பட்டது