38 ஆதி அத்தி காட்சி இரண்டு (கழார் நகரத்தின் அருகிலே காவிரி மணற் பரப் ல்ே மக்கள் திரளாகக் கூடியிருக்கிரு.ர்கள். புதிய ஆடைகளும் புதிய அணிகளுமாக மக்கள் மகிழ்ச்சி பொங்கக் காட்சியளிக்கிரு.ர்கள். ஒருவன் தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண் டிருக்கிருன். காலே சுமார் ஒன்பது மணி யிருக்கும்.1 (பாட்டு) ஆதியிலே அமைந்த சக்தி எங்கள் முத்துமாரி ஆளுகின்ருள் பூமியெல்லாம் சிங்கத்தின் மேலேறி கன்னபுரம் வந்திருப்பாள் எங்கள் முத்துமாரி காடுமலை வந்திருப்பாள் சிங்கத்தின் மேலேறி என்ன சொல்வோம் உன் மகிமை எங்கள் முத்துமாரி எங்களை நீ காக்க வேணும் சிங்கத்தின் மேலேறி தஞ்சமென்று வந்தடைந்தோம் எங்கள் முத்துமாளி தயவு வைத்துக் காக்க வேணும் சிங்கத்தின் மேலேறி பார்க்காமலே நீ யிருந்தால் எங்கள் முத்துமாரி பஞ்சமெல்லாம் தீர்ந்துடுமோ சிங்கத்தின் மேலேறி மாவிளக்குக் கொண்டு வந்தோம் எங்கள் முத்துமாரி மனது வைத்துக் காக்க வேணும் சிங்கத்தின் மேலேறி. (துரித காலத்திற்குச் சென்று கரக ஆட்டம் முடி கிறது. மக்கள் அந்த ஆட்டத்தைப் பாராட்டிக் கொண்டு மெதுவாகக் கலைகிருர்கள். கரகம் ஆடுவோனும் தன்னைப் பாராட்டிய எல்லோ ருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு மறைகிருன். சாத்தனும் மாரனும் எதிர் எதிர்ப்பக்கங்களி லிருந்து வருகிருர்கள். மாரன் தலையிலே முறுக்குக் கூடை இருக்கிறது.) சாத்தன் : அடடே, கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தாப்பிலே நீயே வந்துவிட்டாய். மாரா உன்னைத்தான் தேடி வந்தேன். மாரன் : எதுக்கு என் மேலே அத்தனே அக்கரை?
பக்கம்:ஆதி அத்தி.pdf/39
Appearance