பக்கம்:ஆதி அத்தி.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ஆதி அத்தி ஆதிமந்தி (கிலிபிடித்த குரலில்) : ஆட்டனத்தி வெள்ளத்திலா போய்விட்டீர்?...இல்லை இல்லை...காவிரித் தாயே எனது கணவனை என்ன செய்துவிட்டாய்? அவரை எங்கே ஒளித்து வைத்திருக்கிருய்?...ஐயோ ஆட் டனத்தி... (அலறி மூர்ச்சையுற்று விழுகிருள். வேண்மாள் முன்னல் வந்து மகளை அணுகுகிருள்.) கரிகாலன் : வேண்மாள், ஆதிமந்தி மூர்ச்சை யடைந்துவிட்டாள்-அவளே நன்ருகக் கவனித்துக் கொள்...யாரது அங்கே? அரண்மனை மருத்துவரை உடனே அழைத்து வாருங்கள். (இரண்டு சேவகர்கள் ஒடுகிரு.ர்கள்.) வேண்மாள் (விம்மிக்கொண்டு) : ஐயோ, நான் என்ன செய்வேன். ஆதிமந்தியின் நிலைமை...... கரிகாலன் : வேண்மாள், நீ மன உறுதியோடிருக்க வேண்டும். நீ மனங் கலங்கினல் ஆதிமந்தியின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்...நான் எப்படியும் ஆட்டனத்தியைத் தேடிக் கண்டுபிடிக்க ஏற்பாடு செய் கிறேன். நானே நேரில் செல்லுகிறேன். (வேகமாகச் செல்லுகிருன்.) வேண்மாள் : தோழிகளே, ஆதிமந்தியின் முகத் தில் குளிர்ந்த நீரைத் தெளித்து விசிறி கொண்டு வீசுங்கள். (விம்மிப் பெருமூச்சு விடுகிருள். அவள் கண்களில் நீர் பெருகுகிறது. அரண்மனை மருத்துவர்கள் வருகிருர்கள்.) தோழிகளில் ஒருத்தி : இதோ மருத்துவர்கள் வந்து விட்டார்கள்-அம்மணி, பயப்படாதீர்கள். (மருத்துவர்கள் ஆதிமந்திக்கு சிகிச்சை செய்யத் தொடங்குகிரு.ர்கள். மக்கள் விலகி நிற்கிருர் கள். எல்லோர் முகத்திலும் துக்கம் குடி கொண்டிருக்கிறது.) திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/54&oldid=742443" இருந்து மீள்விக்கப்பட்டது